இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/31/2014

தேசிய காங்கிரஸின் 10ஆவது பேராளர் மாநாடு


(ஹனீபா)
தேசிய காங்கிரஸின் 10வது பேராளர் மாநாடு இன்று (30) அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் மர்ஹூம் ஏ.பி.தாவூத் அரங்கில் நடைபெற்றது. இன்றைய பேராளர் மாநாட்டைசர்வமத பிராத்தனைகளுடன் சம்பிரதாய முறைப்படி கட்சியின் சிரேஷ;ட தலைவர்களில் ஒருவரான டாக்டர் ஏ.உதுமாலெப்பை ஆரம்பித்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்;து அமைச்சரும் தேசிய காங்கிரசின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவினால் நடப்பு வருடத்துக்கான கட்சியின் நிர்வாகிகளை போராளர்களுக்கு மத்தியில் பிரகடனப்படுத்தினார்.

அதன்பிரகாரம் தேசிய காங்கிரசின் கட்சியின் தேசிய மீ உயர் சபை உறுப்பினர்களாக 15 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் அதன்படி கட்சியின் தேசிய தலைவராகவும் கட்சியின் செயலாளர் நாயகமாகவும் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ;ட உதவிச் செயலாளர் நாயகமாக டாக்டர் ஏ.உதுமாலெப்பை, பிரதிச் செயலாளர் நாயகமாக ஐ.ஏ.ஹமீட், உதவிச் செயலாளர் நாயகம் எம்.எச்.ஏ.சமட், தேசிய அமைப்பாளராக மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, தேசிய பொருளாளர் ஏ.எம்.வொஸீர், தெசிய கொள்ளைபரப்புச் செயலாளர் சட்டத்தரணி அமீறுல் அன்சார் மௌலானா, தேசிய இளைஞர் அமைப்பாளராக ஏ.அஹமட் சக்கி, தேசிய பொதுசன தொடர்பு இணைப்பாளர் மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பாளராக பொறியியலாளர் எம்.எஸ்.நஸீர், செயலாளர் தொழில்சங்க விவகாரம் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், தேசிய மகளிர் அமைப்பாளராக மல்லிகா பத்திரன, உறுப்பினர்களாக ஏ.எம்.பாரிஸ், சம்பத் மஹதா, மௌஜூத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கட்சியின் அரசியல் பீட உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் பிரதிச் தேசிய அமைப்பாளர் யூ.எல்.எம்.உவைஸ், பிரதி தேசிய இளைஞர் அமைப்பாளராக டாக்டர் வை.எஸ்.எம்.றியாஸ், பிரதி தெசிய பொருளாளராக ஏ.ஜே.ஜூனைட், மேலதிக கொள்கைபரப்புச் செயலாளராக சட்டத்தரணி பஹீஜ், உதவி கொள்கைபரப்புச் செயலாளராக திரு பாலித,  பிரதி தேசிய இணைப்பாளராக எஸ்.எம்.சபீஸ், செயலாளர் பொருளாதார விவகாரம் எ.எம்.சுபைர், செயலாளர் சட்ட விவகாரம் ஏ.எப்.எம்.றூபி, செயலாளர் கலாசார அலுவல்கள் யூ.எல்.எம்.அரபாத், செயலாளர் கல்வி நடவடிக்கைகள் ஏ.எல்.எம்.கையூ அதிபர்,  அதன் உறுப்பினர்கள் நூறுல் பௌஸ், ஷhஹிர் ஹூசைன், பதூர்கான், யூ.எம்.நிசார், எம்.ஏ.தம்பிக்கண்டு, எம்.ஐ.கியாவுதீன், சமூன், வாஹீட், சட்டத்தரணி சபறுல்லா ஆகியோருமபிரதி கொள்கைபரப்புச் செயலாளர்களாக ஹால்தீன் அமீர், மஜீட் (பாடகர்), பிரதி இணைப்பாளர் சர்வதெச விவகாரம் முஸம்மில், கிழக்குமாகாண இளைஞர் அமைப்பாளராக கலாநிதி சிறாஸ் மீராஷஹிப்,  கிழக்கு மாகாண இணைப்பாளராக சுபைதீன், கிழக்க மாகாண பிரதிச் செயலாளராக எம்.ஏ.றாசீக், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அமைப்பாளராக முஸம்மில்,  அம்பாறை மாவட்ட செயலாளராக ஹனிபா,  அம்பாறை மாவட்ட கொள்கைபரப்பச் செயலாளர் பாறுக், அம்பாறை மாவட்ட பிரதி பொருளாளராக றிஷம், அம்பாறை மாவட்ட பிரதி தலைவர்களாக உபைதுல்லா, சம்சுதீன் ஹாஜி, அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராக நியாஸ், அம்பாறை மாவட்ட உதவிச் செயலாளராக பரீட் அவர்களும் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களினால் சபையில் முன்வைக்கப்பட்டனர்.





»»  read more

2/09/2014

சம்மாந்துறையில் கல்வி வலய ஆரம்ப ஆசிரியர்களுக்கான தர வட்ட செயலமர்வு

சம்மாந்துறையின் கல்வி நடவடிக்கைகளை விருத்தி செய்யும் செயற்றிட்டத்தின் ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக 2014.01.08 ஆந் திகதி காலை 9.00 மணிக்கு சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் இந் நிகழ்வு நடை பெற்றது.

இந்நிகழ்விற்கு சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் ULM. ஹாசிம் தலைமை தாங்கினார்.  இதில் பிரதம அதிதியாக மாகாண சுகாதார அமைச்சர் MIM. மன்சூர் அவர்களும் விசேட அதிதிகளக மாகாண சபை உறுப்பினர்  MLA. அமீர் மற்றும் பிரதேச சபை தவிசாளர்  AMM. நௌஷாத் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

சம்மாந்துறை கல்வி வலயத்தில் ஆரம்பப்பிரிவில் கல்வி கற்பித்துக்கொண்டிருக்கும் ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு தர ரீதியான கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் மேம்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆசிரியர்களுக்கிடையில் சிறந்த விடயஙகள் (Best Practice) பரிமாறப்பட்டது என்பது விசேட அம்சமாகும். 

மேலும், இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து அதிதிகளும்  சம்மாந்துறை வலயத்தின் கல்வி மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.
நாட்டில் உள்ள 9 மாகாணங்களில் உள்ள பாடசாலைகளின் சிறந்த விடயங்களை சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலய மாணவிகளால் வாசிக்கப்பட்டதுடன் இவ்வலயத்திற்கான சிறந்த பாடசாலைக்கான விடயமாக  முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின் சுகாதாரக் கழக மேம்பாட்டு நடவடிக்கை பற்றிய (Best Practice) அங்கு முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். 


தகவல் ஏ.எம். தாஹாநழீம் – பிரதி அதிபர் 
»»  read more

2/08/2014

சது/அறபா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு

(ஹனீபா)
கல்வி என்பது தேடலாகும் அதாவது தொடர்தேடலாகும் தேடலின் தேடலில் திரவியங்கள் பல கிடைக்கும் என்ற தாரகமந்திரத்தின் அடிப்படையில் யார் கல்வியை தேடிப்படிக்கின்றாரே அவர் வாழ்கையில் ஜெயம் பெறுவர் என கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

சம்மாந்துறை கல்வி வலயப் பிரிவுக்குட்பட்ட சது/அறபா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த புலமையாளர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (08) பாடசாலை கேட்போர் கூடத்தில் அதிபர் யூ.எல்.எம்.இஸ்மாயீல் தலைமையில் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார் அவர் இங்கு தொடர்ந்து உரை நிகழ்த்துகையில் ஒரு பிள்ளையின் கல்வி வளர்ச்சியில் அதிபர் ஆசிரியர்கள் என்பவர்களின் பங்களிப்பு மாத்திரம் போதாது பெற்றோர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.

பேற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்க அனுப்பிவிட்டோம் நமது பிள்ளை கல்வியை முழுமையாக பெற்றுவிடுவான் என்று பாராமுகமாக இருந்து விட்டால்; அந்த ஆசைநிராகையாக ஆகிவிடும் நமது பிள்ளை பாடசாலைக்கு செல்கின்றான் அவன் சரியான முறையில் கல்வியை கொண்டு செல்கின்றானா பாடசாலையில் சரியான முறையில் கல்வி போதிக்கப்படுகின்றதா சரியான தலைமைத்துவப்பண்புகள் ஒழுக்க விழுமியங்கள் முகாமைத்துவ செயற்பாடுகள் நடைபெறுகின்றனவா என்பது தொடர்பான ஆய்வை பெற்றோர்கள் மெற்கொள்ள வேண்டும் அவ்வாறில்லாமல் பிள்ளையின் பொக்கில் விட்டுவிட்டால் பிள்ளையின் கல்வி எங்கோ சென்றுவிடும் அது பாரிய விளைவுகளையும் ஏற்படத்திவிடும் எனவேதான் பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வி விடயத்தில் விளிப்படைய வேண்டும்.

சம்மாந்துறைப் பிரதேசத்தில் அண்மைக்காலமாக கல்வியில் எற்பட்ட வீழ்சியினை சீர் செய்து மீளக் கட்டியெழுப்பும் தூய தூர நோக்குடன் கட்சி பேதங்களை தூக்கி வீசிவிட்டு நான் உட்பட எமது மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட் அகியோர் ஒன்றினைந்துள்ளோம் இதற்க வலுச் சேர்க்கும் வகையில் எமது மக்கள் ஒன்றினைந்து எமத ஊரின் கல்வி மற்றும் எனைய அபிவிருத்திகளில் கைகோர்த்து செயற்பட முன்வரவேண்டும்; எனக் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.

எமது மாணவர்களிடையே நல்ல திறமைகள் புதைந்து கிடக்கின்றது அதனை நாம் புடம்போட்டு சீர்செய்யவேண்டும் அதனூடாக நல்ல ஒலுக்கமுள்ள கல்விச்சமுகத்தினூடாக எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கும் சாதனையாளர்களை நல்ல தலைமைகளை உருவாக்கிக் கொள்ள முடியும் எனவும் கூறினார். இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர். தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட், உதவி தவிசாளர் ஏ.கலீலுர்றஹ்மான், கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.ஏ.றச10ல், அட்டாளைசேனை கல்விக் கல்லூரியின்; உபதலைவர் சத்தார் உட்பட அதிபர்கள் ஆசிரியர்கள் பலரம் கலந்த கொண்டனர். பலர் கலந்து கொண்டனர்.










»»  read more

2/04/2014

சுதந்திர தினத்தையிட்டு சம்மாந்துறையில் சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள் வழங்கி வைப்பு

-ஹனீபா
இலங்கையின் 66வது தேசிய சுதந்திர தினத்தையிட்டு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த விNஷட தேவையுடையவர்களுக்கு சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள் மற்றும் சுயதொழில் முயற்சிக்கான காசோலை என்பன வழங்கும் நிகழ்வு இன்று (04) சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நடைபெற்றது.

இவ் வைபவத்தில் அதீதிகளாக கலந்த கொண்ட கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட,; உதவி தவிசாளர் எம்.ஏ.கே.றஹ்மான், பிரதேச செயலாளர் எ.மன்சூர், வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம், அம்பாறை மாவாட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சிஷhந்த சந்திரசேகர, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த தஹநக்க, ஆகியோர் விNஷட தேவையுடையவர்களுக்குரிய பொருட்களை வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வின் போது 08 பேருக்கு சக்கர நாற்காலிகளும், 02பேருக்கு ஊன்றுகோலும், 01வருக்கு சுயதொழில் முயற்சிக்கான இருபதாயிரம் பெறுமதியான காசோலையம் வழங்கி வைக்கப்பட்டன.






»»  read more

சம்மாந்துறை சமூகம் ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு

-ஹனீபா
இலங்கையின் 66வது தேசிய சுதந்திர தினத்தையிட்டு சம்மாந்துறை சமூகம் ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு இன்று (04) சம்மாந்துறை ஹிஜ்றா சந்தி பத்ர் ஜூம்மா பள்ளிவாசல் முற்றலிருந்த ஆரம்பித்து நடை பவணியாக சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தை வந்தடைந்ததுடன் அங்கு சுதந்திர தினம் தொடர்பான பல நிகழ்வுகள் நடைபெற்றன.

கெப்சோ நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.ஜே.காமீல் இம்டாட் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் அதீதிகளாக கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், சம்மாந்தறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட,; உதவி தவிசாளர் எம்.ஏ.கே.றஹ்மான், பிரதேச செயலாளர் எ.மன்சூர், வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம், அம்பாறை மாவாட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சிஷhந்த சந்திரசேகர, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த தஹநக்க, உதவிப் பிரதேச செயலாளர் எம்.அப்துல் லத்தீப், கணக்காளர் ஏ.எல்.மஹறூப், பிரதம நம்பிக்கையாளர் டாக்டர் எம்.வை.எம்.முஸ்தபா, ஜனாதிபதி இணைப்பதிகாரி எம்.எம்.ஏ.காதர் சர்வமத தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.












»»  read more

11/21/2013

தறுஸ்ஸலாம் மகா வித்யாலயத்தின் O/L தின நிகழ்வு

(எம்.ரீ.எம்.பர்ஹான்) 
2013ம் ஆண்டிற்க்கான தறுஸ்ஸலாம் மகா வித்யாலயத்தின் O/L தின நிகழ்வு இன்று (21) பாடசாலை அதிபர் தஸூல் தலைமையில் பாடசாலை ஆராதனை மண்டபத்தில் இடம் பெற்றது.

இன் நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர் மற்றும் சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளரும் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான ஏ.எம்.எம்.நௌஷாட் அவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் கோட்டக்கல்வி அதிகாரிகள் ,வலயக்கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் மானவர்கள் உட்பட பலரும் இன் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க அவர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது.
 







»»  read more

11/14/2013

சம்மாந்துறையில் இடம்பெற்ற இலவச கல்விக்கருத்தரங்கு (Photos)


(எம்.ரீ.எம்.பர்ஹான்)
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ எம்.எல்.ஏ. அமீர் அவர்களின் நீதி ஓதிக்கீட்டில் சம்மாந்துறை ஓசைக் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு 2013-11-12,13,14 ஆகிய தினங்களில் சம்மாந்துறை தேசிய பாடசாலை மற்றும் சம்மாந்துறை அல் மர்ஜான் பெண்கள் பாடசாலைகளில் இடம் பெற்றது.

இன் நிகழ்வுக்கு அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர் ,சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர்,உடற்கல்வி உதவி கல்விப் பணிப்பாளர் ஏ.முஸ்ற்றாக் அலி,ஜனாதிபதி செயலக இணைப்பாளர் ஏ.எல்.ஏ.காதர்,அல் மர்ஜான் பாடசாலை அதிபார் அபீறா சலீம் மற்றும் ஓசைக் அமைப்பின் தலைவர் ஏ.எல்.ஏ.ரஹீம் ஆகியர் கலந்து கொண்டதுடன் இச் செயலமர்வுக்கு வளவாலர்களாக எம்.ஆர்.எம்.இர்ஷாட் (ஆசிரியர்) ஏ.அமீன் இர்ஷாட் (ஆசிரியர்)எம்.றிபாஸ் (ஆசிரியர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.




»»  read more

11/06/2013

திராசாதில் இஸ்லாமிய்யா அரபுக் கலாசாலையினால் ஏற்பாடு செய்யப்ப்டட புதுவருட சிறப்பு நிகழ்வு

(ஹனீபா)
இஸ்லாமிய புதுவருடம்; ஹிஜ்ரி 1435 முஹர்ரம் சிறப்பு தினத்தையிட்டு சம்மாந்துறை திராசாதில் இஸ்லாமிய்யா அரபுக் கலாசாலையினால் ஏற்பாடு செய்யப்ப்டட புதுவருட சிறப்பு நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் வைபவமும்; நேற்று (05) மாலை கலாசாலை மண்டபத்தில் அதிபர் மௌலவி கே.எம்.கே.றம்ஸீன் காரியப்பர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதீதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் கலந்து கொண்டார். 

கௌரவ அதீதிகளாக சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையில் புதிய பிரதம நம்பிக்கையாளர் டாக்டர் எம்.வை.எம்.முஸ்தபா, ஜனாதிபதி கூட்டிணைப்பு உத்தியோகத்தர்களான எம்.எம்.ஏ.காதர், எம்.எல்.ஏ.மஜீட், ஜம்இய்யதுல் உலமா சபையின் செயலாளரும் மத்தியஸ்த சபையின் தவிசாளருமான மௌலவி எம்.ஐ.அச்சுமுஹம்மட் உட்பட உலமாக்கள் விரிவுரையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த வைபவத்தின்போது அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற அஹதிய்யா பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.





»»  read more
புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா