இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

8/02/2013

தமிழகத்தில் 60 வீதமான தாய்மார் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை


அழகு குறைந்து விடும் என்ற எண்ணம், வேலை, விருப்பம் இன்மை உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் 60 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு சரியாக தாய்ப்பால் கொடுப்பதில்லை என சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் கனகசபை கூறினார். 


கடந்த, 1991ம் ஆண்டு முதல் உலக முழுவதும் உள்ள 170 நாடுகளில் "உலக தாய்ப்பால் வார விழா´ கொண்டாடப்படுகிறது. 



பிறந்த குழந்தைக்கு, முதலில் கொடுக்கப்படும் சீம்பாலுக்கு, எதிர்ப்பு சக்தி அதிகம். சுகபிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு, பிறந்த, 15 முதல் 30 நிமிடத்திற்குள், தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 



அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தால், இரண்டு மணி நேரத்திற்குள், தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 



குழந்தைகள் பிறந்த, ஆறு மாதம் வரை, கண்டிப்பாக தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தண்ணீர், டீ, சர்க்கரை தண்ணீர் தருவதை தவிர்க்க வேண்டும். 



ஆறு மாதங்களுக்கு பின், உருளைக்கிழக்கு, உணவு வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். கண்டிப்பாக, இரண்டு ஆண்டு வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 



தமிழகத்தை பொறுத்தவரை, 40 சதவீத பெண்களே, தாய்ப்பால் கொடுக்கின்றனர். அழகு குறைந்து விடும் என்ற எண்ணம், வேலை, விருப்பம் இன்மை உள்ளிட்ட காரணங்களால், 60 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு சரியாக தாய்ப்பால் கொடுப்பதில்லை. 



தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு, மார்பக புற்று நோய், கர்ப்பப்பை வாய் புற்று நோய் வருவது குறைகிறது. குழந்தை பிறப்பின் போது, பெண்களுக்கு ஏற்படும் ரத்தப் போக்கு, அதிகளவில் வெளியேறுவது தவிர்க்கப்படுகிறது. 



குழந்தை பிறந்த பின், அளவில் பெரியதாக இருக்கும் வயிறு, தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், சிறியதாகி விடும். இந்திய அளவில், ஆண்டு ஒன்றுக்கு பிறக்கும், 1,000 குழந்தைகளில், 48 குழந்தைகள் இறந்து விடுகின்றன. 



இதில் தமிழகத்தில், 24 குழந்தைகள் அடங்கும். தமிழகத்தில் பிறந்த ஒரு மாதத்தில், 1,000 குழந்தைகளில், 12 குழந்தைகள் இறந்து விடுகின்றன. 



இதை, 10ஆக குறைக்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு மருத்துவ துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு, கனகசபை கூறினார்.
»»  read more

7/24/2013

பேரீச்சையின் பலன்கள்


அவசிய உண்ண வேண்டிய அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் பேரீச்சையை அவசியம் சாப்பிட வேண்டும்.
எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேரீச்சை. உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது. அதனால் தான் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சைப் பழம் எடுத்துக் கொள்கிறார்கள். பேரீச்சை, எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது. குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு.
பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சை பங்கெடுக்கிறது. டேனின்ஸ் எனும் நோய் எதிர்ப்பொருள் பேரீச்சையில் உள்ளது. நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது டேனின்ஸ். வைட்டமின் ஏ, பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும்,குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது.
சிறந்த நோய் எதிர்ப்பொருள்களான லுடின்,ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை உடற்செல்களை காப்பதோடு, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது. குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது.
பேரீச்சை இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும். 100 கிராம் பேரீச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹிமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலும் பங்கெடுக்கிறது.
பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. உடலுக்குத் தேவையான மின்னாற்றலை வழங்கும் தாதுவாக பயன்படுகிறது. உடற்செல்களும்,உடலும் வளவளப்புடன் இருக்கவும் பொட்டாசியம் அவசியம். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது.
கால்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளது. கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவசியம். நாடித் துடிப்பை சீராக்குதல் மற்றும் ரத்தக் கட்டி ஏற்படுவதைதடுத்தல் ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பனுக்கள் உற்பத்தியில் தாமிரம் பங்கு வகிக்கிறது. மக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் பேரீச்சம் பழத்தில் மிகுந்துள்ளது.
»»  read more

7/01/2013

2015-ம் ஆண்டில் 65 இலட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் மரணம் அடையலாம்!


எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலக அளவில் எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களில் 70 சதவீதம் பேர் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. 

தற்போதைய கணக்கெடுப்பின்படி ஒரு கோடி பேரை கடுமையான எய்ட்ஸ் தாக்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. 

அவர்கள் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த தகவலை ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. 

மேலும் வருகிற 2015-ம் ஆண்டில் 65 இலட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் மரணம் அடைவர், அல்லது பாதிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. அவற்றை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளதாக ஐ.நா சபை அறிவித்துள்ளது.
»»  read more

6/19/2013

2012ல் மாத்திரம் 8541 சிறுமிகள் துஷ்பியோகம்!


இந்தியாவில் கடந்த ஆண்டில் (2012) மாத்திரம் 8541 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்திய தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிக்கையின் படி ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவது அதிகரிக்கப்பட்டு வருவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இந்தியாவில் 2007ம் ஆண்டு 5045 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்த எண்ணிக்கை 2008ல் 5446 ஆக உயர்ந்து, 2009ல் 5336 ஆக குறைந்துள்ளது. 

எனினும், 2010ல் 5484 ஆக உயர்ந்து 2011ல் 7112 ஆக எகிறி, கடந்த (2012) ஆண்டு 8541 சிறுமிகள் காமுகர்களுக்கு விருந்தாகியுள்ளனர் என்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 

இதேவேளை, இந்த 6 ஆண்டுகள் கணக்கெடுப்பில், 2007ம் ஆண்டைத் தவிர்த்து, ஏனைய ஐந்து ஆண்டுகளிலும் இந்திய மத்திய பிரதேச மாநிலம் தான் சிறுவர் துஷ்பிரயோகத்தில் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மத்திய பிரதேசத்தில் 2007ம் ஆண்டில் 1043 சிறுமிகளும், 2008ல் 892 சிறுமிகளும், 2009ல் 1071 சிறுமிகளும், 2010ல் 1182 சிறுமிகளும், 2011ல் 1262 சிறுமிகளும், கடந்த (2012) ஆண்டில் மட்டும் 1632 சிறுமிகளும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 
»»  read more

6/18/2013

எறும்புக்கு அறிவு உண்டா?


சுலைமான் நபி வருவதை எறும்புகள் அறிந்து கொண்டதாக குர்ஆன் கூறுகிறது. அப்படியானால் எறும்புகள் மிதிபட்டு சாவது ஏன்? என்று சிலர் விதண்டாவாதம் செய்கிறார்கள்.

ஆனால் இன்று இவர்களின் விதண்டாவதத்துக்கு மரண அடி கொடுக்கும் வகையில் ஒரு ஆய்வின் முடிவு அமைந்துள்ளது. இது குறித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் 12வது பதிப்புக்காக விரிவுபடுத்தப்பட்டுள்ள பதிப்பில் பின்வருமாறு விளக்கம் அளித்துள்ளோம். (இப்பதிப்பு ஜூலையில் வெளியாக உள்ளது) 470 எறும்புகளுக்கும் அறிவு உண்டு இவ்வசனத்தில் (27:18) எறும்புகள் தமக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே அறிந்து கொண்டு ஸுலைமானும் அவரது படையினரும் நம்மை மிதித்து விடுவார்கள் என்று சக எறும்புகளுக்கு எச்சரிக்கை செய்தது பற்றி கூறப்படுகிறது.

அப்படியானால் எறும்புகள் மனிதனின் கால்களில் மிதிபட்டுச் சாவது ஏன்? சுலைமான் நபி வருவதை அறிந்து மிதிபடாமல் தப்பித்தது போல்  இப்போதும் தப்பிக்க வேண்டியதுதானே என்று சிலர் விதண்டாவாதம் செய்வார்கள். அந்த எறும்புகள் எதை அறிந்து கொண்டதாக இவ்வசனம் கூறுகிறதோ அதை எறும்புகள் இப்போதும் அறிந்து கொள்ளத்தான் செய்கின்றன. ஸுலைமான் என்ற தனி மனிதர் வருவதை எறும்புகள் அறியவில்லை. ஸுலைமானும் அவரது படையினரும் வருவதைத் தான் அறிந்து கொண்டன. பெரிய படைகள் படைகளுக்கே உரிய அதிர்வுகளை எழுப்பித்தான் நடைபோடுவார்கள். அவர்களுடன் உள்ள யானை மற்றும் குதிரைப்படைகளாலும் நிலத்தில் மிகப்பெரிய அதிர்வுகள் ஏற்படும். இப்படி நிலத்தில் ஏற்படும் கடுமையான அதிர்வுகளையும் அந்த அதிர்வுகள் எந்தத் திசை நோக்கி நகர்கின்றது என்பதையும் மிக விரைவாக அறிந்து கொள்ளும் ஆற்றல் எறும்புகளுக்கு உண்டு என்று இப்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்தக் கண்டுபிடிப்பு இதுதான் நியூயார்க்: பூகம்பம் ஏற்படப் போவதை, சிறிய உயிரினமான, எறும்புகள் ஒரு நாளுக்கு முன்பே அறிந்து கொள்வதாக, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூகம்பத்தை முன்கூட்டியே துல்லியமாக அறியக்கூடிய கருவி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஜெர்மனியில் உள்ள டிஸ்பர்க் பல்கலைக்கழக, உயிர் அறிவியல் துறை ஆய்வாளர், கேப்ரியல் பார்பெரிக், தன்னுடைய சக ஆய்வாளருடன், 3 ஆண்டுகள் சிவப்பு நிற சிற்றெறும்புகள் குறித்து ஆய்வு செய்தார். இதற்காக, பிரத்யேக மென்பொருளில் உருவான, வீடியோ காமிரா துணையுடன் இந்த ஆய்வை மேற்கொண்டார்.

அவர் தனது ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: சாதாரண நாட்களில், பகல் நேரம் முழுவதும் இரை சேகரிப்பதில் ஈடுபடும் எறும்புகள், இரவு நேரங்களில் தன்னுடைய இடமான புற்றில் ஓய்வெடுக்கும். ஆனால், பூகம்பம் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பு, இரவு நேரத்தில், புற்றில் இருந்து வெளியேறி விடுகின்றன. பூகம்பம் ஏற்பட்ட பின்பு, சாதாரண நிலைக்கு திரும்பி விடுகின்றன. பூகம்ப நேரத்தில் பூமிக்கடியில் தோன்றும் வாயுக்கள் மற்றும் இயக்கங்கள் காரணமாக, எறும்புகள் வெளியேறுகின்றன. இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வை அப்படியே 1400 ஆண்டுகளுக்கு முன்னர் சொல்வதாக இருந்தால் அது படைத்த இறைவனால் தான் இயலும்.
Bas onlinepj.com
»»  read more

6/14/2013

2025ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 810 கோடியாகும் : ஐக்கிய நாடுகள் சபை


2025ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 810 கோடியாகும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது. 

இன்று உலக மக்கள் தொகை 720 கோடியாக இருக்கும் நிலையில், இன்னும் 12 ஆண்டுகளில் அதாவது 2025ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 810 கோடியாகவும், 2050ஆம் ஆண்டு 960 கோடியாகவும் உயரும் என்று ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது வளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் தொகை இந்த காலக்கட்டத்தில் பெரிய அளவில் உயராது என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தற்போதிருக்கும் மக்கள் தொகையை விட, 2050ஆம் ஆண்டில், ஆப்ரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மக்கள் தொகை சற்று அதிகமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
»»  read more

5/16/2013

நீண்ட நேரம் உட்காருவது உயிருக்கு ஆபத்து


நீண்ட காலம் வாழ ஆசையா… இதை உட்கார்ந்து படித்து கொண்டிருப்பவர்கள் எழுந்து நில்லுங்கள். ஆம். ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு மிரட்டுகிறது.
ஆஸ்டிரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக பொதுநல மருத்துவ பிரிவு பேராசிரியர் ஹைட் வான் டெர் பிளாஜ். இவரது தலைமையில் ஒரு குழு நடத்திய ஆய்வில் 2 லட்சம் பேர் பங்கேற்றனர். அதன் அறிக்கை ஏஐஎம் என்ற மருத்துவ இதழில் வெளியானது. அதில் இடம்பெற்ற விவரங்கள்.
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதே பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. பருமன், டயபடீஸ் ஆகியவை அவற்றில் முக்கியமானவை. ஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு குறைவாக உட்கார்ந்தே இருப்பவர்களுடன் ஒப்பிடுகையில், 11 மணி நேரத்திற்கு அதிகமான நேரம் உட்கார்ந்து இருப்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது.
2 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட உடல் உழைப்பு, எடை, உடல் ஆரோக்கிய நிலை ஆகியவற்றின் அடிப்படையில் துல்லியமாக நடத்திய ஆய்வில் இது தெரிய வந்தது. ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செய்வது, நீண்ட நடைபயிற்சி ஆகியவையும் அவசியம்தான். ஆனால், அவற்றை விட மிக முக்கியமானது நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காராமல் இருப்பது. உட்கார்ந்தே இருந்தால் பல உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அலுவலக நேரத்தில் எத்தனை முறை முடியுமோ 20 முதல் 30 வினாடிகள் வரை எழுந்து நிற்கலாம். போன் பேசும் போது நிற்கலாம். லிப்ட், எஸ்கலேட்டரை தவிர்த்து படிகளில் ஏறலாம். இமெயில் , இன்டர்காம் தகவல் பரிமாற்றம் தவிர்த்து நேரில் சென்று பார்க்கலாம். ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை இருக்கையை விட்டு எழுந்து சில நிமிடங்கள் நடக்கலாம். குறைந்தபட்சம் உட்கார்ந்த பொசிஷனை மாற்றி தோள்பட்டையை அசைத்து, நீண்ட மூச்சிழுத்து விட்டு தசைகள் அழுத்தத்தை ரிலாக்ஸ் செய்யலாம்.
ஆய்வில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்,
45 வயதுள்ள 2 லட்சம் பேரிடம் 2009 முதல் 2013 வரை, 5 ஆண்டுகள் ஆய்வு நடத்தப்பட்டது.
ஒரு நாளில் 3 மணி நேரம் வரை உட்கார்ந்திருப்பவரைவிட 6 மணி நேரம் உட்கார்ந்திருப்பவர் 15 ஆண்டுகளுக்குள் இறக்க நேரிடலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பணி நேரம் மட்டுமின்றி ஓய்வை சேர்த்து ஒருநாளில் 90 சதவீத நேரத்தை பெரும்பாலோர் உட்கார்ந்தே செலவிடுகின்றனர்.
»»  read more

5/08/2013

லேப்டாப் உபயோகிக்கும் ஆண்கள் கவனத்திற்கு!


18 முதல் 25 வயதுடைய ஆண்களில் 5 பேரில் ஒருவர் உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
*
லேப்டாப் உபயோகிப்பதால் அதில் இருந்து வரும் வெப்பக் கதிர் ஆண்களை தாக்கி அவர்களின் உயிரணுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி குழந்தையின்மையை ஏற்படுத்துவதாகவும், லேப்டாப்பின் மேல் பாகம் தயாரிக்க பயன்படும் மூலப் பொருளில் உயிரணுக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வேதிப் பொருட்கள் கலந்து உள்ளதாகவும் ராவ் தெரிவித்துள்ளார்.
*
மேலும் அதிகமாக காப்பி அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கும் அதில் உள்ள நச்சுப் பொருளால் உயிரணுக்கள் குறையும் அபாயம் உள்ளதாகவும்
தெரிவித்துள்ளார்.
*
நகர்ப் புறத்தில் இருக்கும் ஆண்களை விட கிராமப் புறத்தில் இருக்கும் ஆண்கள் உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவால் பாதிக்கப் படாமல் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்த ராவ் மாறி வரும் வாழ்க்கை முறைகளுக்கேற்ப நாமும் சில மாற்றங்களை கையாண்டால் இது போன்ற பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றார் அவர்.
*
இதன்படி முறையான உடற்பயிற்சி. சூடான நீரை பயன்படுத்தாமை, புகை மற்றும் காபி அருந்தும் பழக்கத்தை கை விடுதல், இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்த்தல் போன்ற பழக்கங்களை கடைப் பிடித்து வருவதன் மூலம் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
»»  read more

4/27/2013

நீண்ட நேர கணினி பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள்


இடைவெளியின்றி ஒவ்வொரு நாளும் நீண்ட நேரம் கணினியைப் பார்த்து உபயோகிக்கும் பலருக்கு உடலிலும், கண்களிலும் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. இந்த பாதிப்புக்கள் 'கணினிப் பார்வை நோய்கள்' (Computer Vision Syndrome)என்றழைக்கப்படுகிறது. கணினியில் ஒரு நாளில் மூன்று மணி நேரமும், அதற்கு மேலும் தொடர்ந்து வேலை செய்பவர்களில் 90 சதவீதமானவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

உடலில் சோர்வு, பின் கழுத்து வலி, முதுகு மற்றும் தலைவலி, கைகள், மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை வலி ஆகிய நோய்கள் ஏற்படுகின்றன. தொடர்ந்து கணினித் திரையைப் பார்த்துக் கொண்டிருப்பதாலும், கண் இமைகள் சிமிட்டப்படுவது குறைவதாலும் கண்கள் உலர் தன்மை அடைகின்றன. இதனால் கண்களில் உறுத்தல், எழுத்துக்கள் இரண்டாகவும், பலவாகவும் தெரிதல் மற்றும் பார்வை தெளிவற்றும் தோன்றுகின்றன.

இந்த சிரமங்களுக்கான காரணங்கள்:
1 அமரும் ஆசனத்தின் அமைப்பு, உயரம் மற்றும் நாம் அமரும் நிலை.

2 கணினி விசைப் பலகைக்கும், கணினித் திரைக்கும் போதுமான வெளிச்சமின்மை.

3. கணினித் திரையில், கணினி பயன்படுத்துபவர்களுக்குப் பின் புறமுள்ள ஜன்னல்கள் மற்றும் விளக்குகளிலிருந்து கண் கூசும் ஒளி வீச்சு.

4. கண்களுக்கும் திரைக்குமுள்ள இடைவெளி.

5. கணினி பயன்படுத்தும் தனி ஒருவரின் வயதுக்கேற்றபடி, கண்களின் சரி செய்யப்படாத தூரப் பார்வை(Myopia),கிட்டப் பார்வை (Hypermetropia)சிதறல் பார்வை (Astigmatism)மற்றும் வெள்ளெழுத்து (Presbyopia)பார்வை குறைபாடு.

6. கண்களின் தசை அழற்சியால், கண்கள் ஒருங்கிசைவு சரியில்லாதிருத்தல் (Ocular Muscle Imbalance)


உடலிலும், கண்களிலும் ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்ப்பது எப்படி? 
உடலிலும், கண்களிலும் ஏற்படும் சிரமங்களெல்லாம் சாதாரணமாக தற்காலிகமானதே. கணினியில் வேலை செய்வதை நிறுத்தி எழுந்த சில நிமிடங்களில் அதிக தொல்லைகள் இராது.

கணினியில் வேலை செய்யும் போது, குறிப்புகளை விசைப் பலகைக்கு மேலும், கணினித் திரைக்கு அருகிலும் வைத்துக்கொண்டால் நல்லது. ஒரு மணிக்கொரு முறை ஆசனத்தை விட்டு எழுந்து, அலுவலகத்திற்கு உள்ளேயே சிறிது நடக்கலாம். கை கால்களை நீட்டி, மடக்கி பயிற்சி செய்யலாம். கழுத்து, தோள் இரண்டுக்கும் தக்க பயிற்சி செய்யலாம்.

1. அமரும் நாற்காலி உயரத்தை வேண்டுமளவு ஏற்றவும், இறக்கவும் தகுந்ததாக இருக்க வேண்டும். நிமிர்ந்து உட்காரும் பொழுது முதுகுக்குப் பொருத்தமாகவும், உட்காரவும், சாய்மானத்திலும் Foamவைத்தும் இருக்க வேண்டும். கைகளை சம நிலையில் வைக்க நாற்காலியில் கைத்தாங்கி வைத்தும் இருக்கவேண்டும்.

2. கணினி விசைப் பலகையிலும், திரையிலும் நல்ல வெளிச்சம் இருக்கும்படி விளக்குகள் அமைக்கப்பட வேண்டும்.

3. கண்கள் கூசும் ஒளி வீச்சு இருந்தால், கணினியின் இருப்பிடத்தை மாற்றியமைக்க வேண்டும்.

4. கணினியின் திரைக்கு வெகு அருகில் செல்லாமல் சற்று தூரத்திலிருந்தபடி (சுமார் 33 செ.மீ) பார்த்து வேலை செய்ய வேண்டும்.

5. கண் மருத்துவரிடம் கண்களை வருடம் ஒரு முறை, முறையாகப் பரிசோதித்து தேவைக்கேற்றபடி கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும். 40 வயதிற்கு மேல் கண்கள் பரிசோதனையின் போது,Glaucomaபாதிப்பில்லையென்றறிய, கண்களின் நீர் அழுத்தத்தையும் (Intraocular Pressure)பரிசோதிக்க வேண்டும். வெள்ளெழுத்துக் கண்ணாடிகளை இரண்டு வருடத்துக்கு ஒருமுறை 40 வயதிலிருந்து 55 வயது வரை மாற்ற வேண்டியிருக்கலாம்.

6. தேவையானால், கண் தசைகளின் ஒருங்கிசைவை (Muscle Balance) அரசு கண் மருத்துவமனைகளில் பரிசோதித்துக் கொள்ளலாம். தேவையானால் பயிற்சியும் எடுத்துக்கொள்ளலாம்.

கணினியில் வேலை செய்யும்பொழுது, அவ்வப்பொழுது கண்களுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். தொடர்ந்து கணினியைப் பார்த்துக்கொண்டிராமல், இடையிடையில் ஜன்னல் வழியாக தூரத்தில் உள்ள பொருளையோ, வானத்தையோ வேடிக்கை பார்க்கலாம்.

அடிக்கடி கண் இமைகளை மூடி மூடித் திறப்பதால், கண்ணீரினால் கண்கள் ஈரமாகி, கண்கள் உலர்வதையும், கண்களின் உறுத்தலையும் குறைக்கலாம். மருந்துக் கடைகளில் கிடைக்கும் Tears Plus, Moisol போன்ற சொட்டு மருந்துகளையும் உபயோகிக்கலாம்.

கண்களுக்கு மிக அருகிலுள்ள கணினித் திரையையே கண் இமைக்காமல் நீண்ட நேரம் பார்ப்பதை விட, சுலபமாகப் பின்பற்றக் கூடிய '20 - 20 - 20 சட்டம்' (20 - 20 - 20 சுரடந) சொற்றொடரின்படி, 20 நிமிடத்திற்கு ஒரு முறை, 20 அடி தூரத்திலுள்ள பொருட்களை, 20 நொடிகள் பார்ப்பது கண்களுக்கு ஓய்வைத் தரும் எனப்படுகிறது. அரை மணிக்கொருமுறை 20 நொடிகள் கண்களை மூடியிருப்பதும் நல்ல பயன்தரும் எனப்படுகிறது. எனவே தகுந்த முன்னேற்பாடுகளைக் கடைப்பிடித்து உடல் நலம் பேணுவோம். கண்களைக் காப்போம்.

ஆக்கம் - அனாஸ் அப்பாஸ்
Bas TM 
»»  read more

3/12/2013

முகநூல் "விருப்பங்கள்" ஒருவரை அடையாளம் காட்டிவிடும்

BBC : பேஸ்புக் எனப்படும் முகநூலில் ஒருவர் விரும்பும் விஷயங்களை வைத்து, அவரது பாலினம், அரசியல் சார்பு நிலை, புத்திசாலித்தனம் வரை அவரது அனைத்து குணாம்சங்களையும், முழுமையான ஆளுமையையும் கணிக்கமுடியும் என ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு.

இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் பேஸ்புக் என்பது மனிதர்களின் இன்றியமையாத அடிப்படை அடையாளமாக மாறிவருகிறது. இந்த முகநூலில் ஒருவர் விரும்பும் விஷயங்களை வைத்து, அவரது பாலினம் என்ன என்பதில் துவங்கி, அவரது அரசியல் சார்பு நிலை, அவரது புத்திசாலித்தனம் வரை ஒருவரின் குணாம்சங்களையும், முழுமையான ஆளுமையையும் தெரிவித்துவிட முடியும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

பேஸ் புக்கில் இருக்கும் ஒருவர் தனக்கு பிடித்தமான செய்தி, கருத்து, கட்டுரை, புகைப்படம் அல்லது காணொளியை விரும்புகிறார் என்றால் அதை தெரிவிப்பதற்கு லைக் என்கிற பொத்தானை அழுத்தினால் அவர் அதை விரும்புகிறார் என்று பொருள். இப்படி ஒருவர் தனது முகநூலில் எதையெல்லாம் விரும்புகிறார் என்று தொகுத்துப்பார்த்தால் அவர் ஆணா பெண்ணா, ஒருபாலுறவுக்காரரா என்பது முதல், அவர் எந்த அரசியல் கட்சி ஆதரவாளர், என்னவிதமான பொருளாதார கருத்தாளர், எந்த மதத்தவர், அவரது புத்திக்கூர்மையின் அளவு என்ன என்பது வரை ஒருவரின் பெரும்பான்மை குணாம்சங்கள் மற்றும் ஆளுமைகளை சரியாக கணித்துச் சொல்லமுடியும் என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆளுமையை காட்டும் அல்கோரிதம்
இந்த ஆய்வுக்காக சுமார் ஐம்பத்திஎட்டாயிரம் முகநூலர்களின் தகவல்கள் பயன்படுத்தப்பட்டன. இவர்கள் தங்களின் முகநூலில் என்னவிதமான விஷயங்களை விரும்பினார்கள் என்கிற விவரங்களும், இவர்கள் எந்த பகுதியில் வசிக்கிறார்கள் என்கிற விவரங்களையும் சேகரித்த ஆய்வாளர்கள், இவற்றை முதலில் சைக்கோமெட்ரிக் டெஸ்ட் எனப்படும் உளவியல்தன்மைகளை கண்டறியும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார்கள்.

அடுத்ததாக, இந்த முகநூலர்கள் விரும்பி லைக் போட்ட விவரங்களை அல்கோரிதம் எனப்படும் நெறிமுறை கணக்கிடும் முறையில் கணக்கிடும் மென்பொருளில் உள்ளீடு செய்தார்கள்.

உளவியல்தன்மைகளை கண்டறியும் பரிசோதனை முடிவுகளையும், அல்கோரிதம் எனப்படும் நெறிமுறை கணக்கிடும் முறையில் கிடைத்த முடிவுகளையும் ஒன்றுக்கொன்று பொருத்திப்பார்த்தார்கள்.

இதில் கிடைத்த முடிவுகள் தங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்ததாக தெரிவிக்கிறார் இந்த ஆய்வின் முடிவுகளை தொகுத்தவரான டேவிட் ஸ்டில்வெல். அல்கோரிதம் கணிதக்கணக்கின்படி இந்த பரிசோதனையில் பங்கேற்ற முகநூலர்களில் யாரெல்லாம் ஆண்கள் என்பதை கண்டறிவதில் 88 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது. அதேபோல முகநூலர்களின் எத்தனைபேர் ஆப்ரிக்க வம்சாவளியினர் என்பதை 95 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது. வெள்ளையினத்தவர் யார் என்பதை 85 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது.

இவர்களின் மத அடையாளங்களை கண்டுபிடிப்பதில் கிறித்தவர்கள் யார், முஸ்லீம்கள் யார் என்பதை 82 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது. ஒருவருக்கு திருமணமானதா இல்லையா என்பதையும், ஒருவர் போதைவஸ்துக்களை பயன்படுத்தியிருக்கிறாரா இல்லையா என்பதையும் 65 சதவீதம் முதல் 73 சதவீதம் சரியாக கணிக்கமுடிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

தனிமனித அந்தரங்கத்துக்கு ஆபத்து
இதில் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இவர்கள் விரும்பிய விஷயங்களில் வெளிப்படையாக பாலியல் விவரங்களை அடையாளப்படுத்தும் விவரங்கள் எவையும் இல்லை. மாறாக இசை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்ற பொதுவான விஷயங்களை இவர்கள் விரும்பியிருந்த விதத்தை வைத்தே இந்த அல்கோரித கணக்கீட்டின் படி இவர்களின் அடையாளங்கள் சரியாக கணிக்க முடிந்திருக்கிறது என்று சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், இது விளம்பர நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சாதகங்களை அளித்தாலும், தனிமனித அந்தரங்கத்தை பாதுகாப்பதில் இது மிகப்பெரிய சவால்களை தோற்றுவிக்கும் என்றும் எச்சரித்திருக்கிறார்கள்.
உதாரணமாக, இந்த கணக்கீட்டை பயன்படுத்தி, விளம்பர நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட முகநூலரை குறிவைத்து தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்த முடியும். இது வர்த்தக ரீதியில் அவர்களுக்கு சாதகமான விஷயம்.

அதேசமயம், தனிமனிதரின் முகநூல் செயற்பாடுகளை அவருடைய வெளிப்படையான விருப்பம் இல்லாமலே மற்றவர்களால் பார்க்க முடியும், பயன்படுத்த முடியும், குறிப்பிட்ட நபரின் அந்தரங்க அடையாளங்களை தெரிந்துகொள்ள முடியும் என்கிற நிலைமை, தனிமனித சுதந்திரத்திற்கு மிகப்பெரிய சவாலாக விளங்கும் என்கிற கவலைகளும் எழுந்துள்ளன.

இதை தடுப்பதற்கு சில எளிய வழிகளும் இருக்கின்றன என்றும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உதாரணமாக, முகநூலில் ஒருவர் எதையெல்லாம் விரும்பியிருக்கிறார் என்பதை காட்டும் லைக்குகள் பொதுவாக மற்றவர்கள் பார்க்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் முகநூலில் இருக்கும் பிரைவசி செட்டிங்குகள் எனப்படும் அந்தரங்கத்தை பாதுகாக்கும் அடிப்படை கட்டமைப்புக்கு சென்று, இந்த லைக்குகளை மற்றவர்கள் பார்க்கதபடி செய்ய முடியும் என்று கூறும் அந்தரங்க பாதுகாவலுக்கான அமைப்புக்கள், தேவைப்படுபவர்கள் அதை செய்துகொள்வது நல்லது என்றும் பரிந்துரை செய்கிறார்கள்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் இந்த ஆய்வு முடிவுகள், முகநூலில் அதிகரித்துவரும் தனிமனித அந்தரங்க பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை மேலும் அதிகப்படுத்தக்கூடும்
»»  read more

3/09/2013

புகைத்தலால் வருடாந்தம் 21,000 பேர் பலி

இலங்கையில் புகை பிடித்தல் காரணமாக வருடாந்தம் 21000 பேர் வரையில் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரவித்துள்ளது.

புகைத்தலால் ஏற்படுகின்ற நோய்களால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோருக்கு அவர்களது குடும்பங்கள் பெருந்தொகை பணத்தை செலவிட நேரிடுவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சிகரெட் புகையை கர்ப்பிணித் தாய்மார்கள் சுவாசிப்பதால் வருடாந்தம் ஏற்படுகின்ற கரு கலைவுகளின் எண்ணிக்கையை இதுவரை மதிப்பிட முடியாமற்போயுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

புகைப் பிடித்தலை தடுப்பதற்கு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

»»  read more

2/15/2013

காது கேளாதோரின் மூளை செயல்பாடுகள் குறையலாம் ஆய்வில் தகவல்

கேட்பதில் பிரச்சினை உள்ளவர்களுக்கு அந்தப் பிரச்சினை இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் மூளையின் திறன்கள் வேகமாகக் குறைந்துவருகின்றன என்று அமெரிக்காவில் நடத்தப்பட்டுள்ள ஒரு ஆய்வு கூறுகிறது.
ஒருவருடை கேட்கும் திறன் குறையக் குறைய மூளையின் இணைப்புகளில் மாற்றங்கள் நிகழ்வதும், மற்றவர்களுடன் உரையாட முடியாமல் போவதால் சமூக ரீதியில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதும் மூளைத் திறனின் வீழ்ச்சிக்குக் காரணம் கருதப்படுகிறது.
ஆகவே கேட்கும் கோளாறுகளுக்கு தாமதமின்றி சிகிச்சை அளிப்பதன் மூலமாகவும், கேட்பதில் உதவக்கூடிய கருவிகளை அணிந்துகொள்வதன் மூலமாகவும் மூளைத் திறன் பாதிப்பு ஏற்படுவதை ஒத்திப்போட முடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
எழுபது வயதைத் தாண்டியவர்கள் சுமார் இரண்டாயிரம் பேரிடம் ஆறு ஆண்டுகாலம் கேட்கும் திறன் மற்றும் மூளைத் திறன் பரிசோதனைகளை நடத்தி ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.
எழுபது வயதுக்கு மேல் உள்ளவர்களின் மூளைத் திறன் போகப் போக கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது என்றாலும், கேட்புத் திறனில் பாதிப்பு உள்ளவர்களிடம் இந்தப் பாதிப்பு மற்றவர்களை விட மிக வேகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூளைத் திறனில் பாதிப்பு ஏற்படுவது டிமென்ஷியா எனப்படும் மூளை அழுகள் நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம் என ஆய்வில் பங்கேற்றிருந்தவர்களின் ஒருவரான டாக்டர் பிராங்க் ளின் கூறுகிறார்.

ஆய்வு

அமெரிக்காவிலேயே கூட காது கேட்பதில் பிரச்சினை உள்ளவர்களில் 15 சதவீதம் பேர்தான் காது கேட்பதில் உதவக்கூடிய ஹியரிங் எய்ட் கருவிகளைப் பொறுத்திக்கொள்கிறார்கள். பெரும்பாலானோர் அந்தப் பிரச்சினைக்கு சிகிச்சை பெறாமலேயே இருந்துவிடுகின்றனர் என்று டாக்டர் லின் பிபிசியிடம் சுட்டிக்காட்டினார்.
கேட்புத் திறன் பாதிப்புக்கும் மூளைத் திறன் பாதிப்புக்கும் நேரடித் தொடர்பு உள்ளது என்பது இதுவரை உறுதியாக கண்டறியப்படவில்லை என்று பிரிட்டனில் அல்செய்மர்ஸ் நோய் ஆய்வு அமைப்பைச் சேர்ந்த டாக்டர் எரிக் கர்ரன் கூறுகிறார்.
ஆனாலும் மேற்கொண்டு ஆய்வுகள் தேவைப்படும் முக்கியமான ஒரு விஷயம் இது என்று அவர் குறிப்பிட்டார்.
அப்படி தொடர்பு இருப்பது உறுதிசெய்யப்படுமானால், முன்கூட்டியே கேட்புத் திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்களுக்கு மூளை அழுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தலாம் என அவர் தெரிவித்தார்
»»  read more

2/02/2013

உடல் பருமனால் அதிகரிக்கும் மரணம்! ஆய்வில் தகவல்


ஊட்டச்சத்துக் குறைவினால் இறப்பவர்களை விட, உடல் பருமனால் இறப்போரின் எண்ணிக்கை அதிகம் என்று உலகளாவிய அளவில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டில் ஏற்பட்ட மரணங்களுக்கான காரணங்களையும், அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு மரணத்தை ஏற்படுத்திய காரணங்களையும் ஒப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
உலக அளவில் பார்க்க உடற்பருமன் காரணமாக 2010ஆம் ஆண்டில் 30 லட்சம் பேர் இறந்தனர். ஊட்டச் சத்துக் குறைவின் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக இருக்கிறது. ஆப்பிரிக்காவில் போதிய உணவு இல்லாமல், பலர் குறைந்த காலத்திலேயே இறந்து போவது தொடர்வதாக இந்த ஆய்வு எச்சரித்துள்ளது.
உணவுப் பழக்க வழக்கங்கள் மாறுவதும் உடல் உழைப்பு குறைவதுமே இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. தவிர உலக மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது என்றாலும், அவர்கள் நோய்வாய்ப்படுகின்ற அளவு அதிகரித்துள்ளது என்றும் இந்த ஆய்வு காண்பிக்கிறது. மக்களிடையே நோயின் தாக்கங்கள் பற்றி உலக அளவில் இதுவரை இல்லாத பெரிய அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் தி லான்செட் மருத்துவ இதழில் வெளியாகியிருக்கின்றன.
ஐந்து வருடகாலம் வேலை செய்து தரவுகளை எல்லாம் ஒருங்கிணைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு ஐநூறு ஆராய்ச்சியாளர்கள் பங்களிப்பு செய்துள்ளனர். கூடிய இரத்த அழுத்தம், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவை உடல்நலப் பாதிப்புகளின் மிகப் பெரிய காரணியாக உருவெடுத்துள்ளன என்று இந்த ஆய்வு காட்டுகிறது.
2010 நிகழ்ந்த இறப்புகளில் நான்கில் ஒன்றுக்குக் காரணமாய் இருதயக் கோளாறும், மூளையில் இரத்தக்கசிவும் இருந்துள்ளது என இந்த ஆய்வு கூறுகிறது. அந்த ஆண்டில் மொத்தம் 1 கோடியே 30 லட்சம் இறப்புகளுக்கு அந்நோய்கள் காரணமாக இருந்துள்ளன. மக்களின் ஆயுட்காலம் பரவலாகப் பல நாடுகளிலும் அதிகரித்துள்ளது என்றாலும், சராசரி ஆயுட்கால வயதில் செல்வந்த நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி என்னவோ குறையவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
தவிர எய்ட்ஸ் நோயும் உயிரிழப்புகளுக்கான பெரிய காரணங்களுல் ஒன்றாக இருக்கிறது. 2010ஆம் ஆண்டு மொத்தம் 15 லட்சம் பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். இறப்புகளை ஏற்படுத்திய காரணங்களின் வரிசைப் பட்டியலில் நீரிழிவு நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் மேலே சென்றுள்ளன. ஆனால் வயிற்றுப் போக்கு, காசநோய் போன்றவை இப்பட்டியலில் கீழிறங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
»»  read more

1/13/2013

படுத்தும் சரியாகத் தூக்கம் வரவில்லையா ! என்ன? செய்யலாம்

IN : படுத்ததும் தூக்கம் வருவது என்பது அது ஒரு வரம் தான். ஆனால் எல்லோருக்கும் இது சாத்தியமில்லை.சிலருக்கு படுத்து நீண்ட நேரத்திற்குப்பின்னரே தூக்கம் வரும். அப்படியும் தூக்கம் வராதவர்கள் கெளண்டிங் ஷிலீப் செய்வதுண்டு.அதாவது எளிதில் தூக்கம் வராதவர்கள் ஒன்றிலிருந்து 100.... 200..... 300 வரை எண்ணத்துவங்குவார்கள். அப்படி எண்ணிக்கொண்டிருக்கும் போதே தூக்கம் வந்து விடும் என்பது ஒரு நம்பிக்கை.

இப்படி எண்ணுவதற்கு கெளண்டிங் ஷிலீப் என்று பெயர். இங்கிலாந்துகாரர்களுக்கு தூக்கம் பிடிப்பதற்கு குறைந்தது 37 நிமிடங்கள் ஆகிறது இது குறித்த ஒரு ஆய்வு.

அதற்காக அவர்கள் மெல்லிசையை விரும்பி கேட்கிறார்களாம். இந்த மெல்லிசையை கேட்டுக்கொண்டிருக்கும் போதே தூங்கிப்போவார்களாம்.

சுவாரசியமாக இயற்கையான சப்தங்களை கேட்டுக்கொண்டே தூங்க முயற்சிப்பவர்களும் இருக்கிறார்கள்.

உதாரணமாக கிரீச்சிடும் பறவைகளின் ஒலிகள்இ மெல்லிய காற்றின் இரைச்சல்இ நீரோடையின் சலசலப்பு இபோன்றவை தூக்கத்தை எளிதில் வரவழைக்க பயன்படுபவையாக இருக்கின்றன என்கிறது இந்த ஆய்வு.

இவற்றுக்கெல்லாம் மேலாக இருக்கவே இருக்கிறது பழமையான ஒரு முறை. அது தான் புத்தகம் படிப்பது. இதுவும் தூக்கத்தை வரவழைக்கிற விஷயங்களில் முக்கியமானது தான்.

துணையுடன் பேசிக்கொண்டே தூங்கிபோகிறவர்களும் இருக்கிறார்கள். விசித்திரமாக கடிகாரத்தின் டிக் டிக் ஒசைஇ சாலையில் செல்லும் வாகனங்களின் சப்தம்இ வேக்குவம் க்ளீனர் மற்றும் ஹேர் ட்ரையரின் சப்தமும் தூக்கத்தை வரவழைக்கும் விஷயங்களின் பட்டியலில் இடம் பெறுகின்றன.

இவையத்தனைக்கும் வில்லனாக இருப்பது பக்கத்தில் தூங்குபவரின் குறட்டை சத்தம் என்று ஆத்திரப்படுகிறார்கள் உண்மையில் பாதிப்புக்குள்ளானவர்கள்.
»»  read more

1/08/2013

வயதான பின்னும் தாம்பத்ய உறவில் ஆர்வம் காட்டும் பெண்கள்:ஆய்வில் தகவல்!!!


உடல் ஆரோக்கியமாக இருக்கும் பெண்கள் வயதான பின்னும் தாம்பத்ய உறவில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனராம். உடல்நலம் குறைந்தவர்களுக்கு மட்டுமே செக்ஸ் ஆர்வம் குறைந்து போகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கலிபோர்னியா- சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன. நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏற்படும் செக்ஸ் உணர்வுகளைப் பற்றியும் அவர்களுக்கு அதில் ஏற்படும் திருப்தி பற்றியும் அறிந்து கொள்வதற்காகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
45 வயது முதல் 80 வயது வரை உடைய 2000 பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். 65 வயதை உடைய பெண்கள் தங்கள் துணையுடனான உறவில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர். ஆய்வு நடைபெறுவதற்கு முந்தைய மூன்று மாதங்களுக்கு அவர்களின் செக்ஸ் ஈடுபாடு தீவிரமாக இருந்ததாம். இவர்களில் 39 சதவிகிதம் பேர் தங்களுக்கு செக்ஸில் ஆர்வம் இல்லை என்று கூறியுள்ளனர். 36 சதவிகிதம் பேர் தங்களின் துணைக்கு ஆர்வம் குறைவாக இருப்பதாக கூறியுள்ளனர்.
23 சதவிகிதம் பேர் உடல்நலக்குறைபாடு காரணமாக துணைக்கு செக்ஸில் ஆர்வம் குறைவாக இருப்பதாக கூறியுள்ளனர். 9 சதவிகிதம் பேர் உடல்நலக்குறைபாடு காரணமாக செக்ஸில் ஆர்வம் குறைவதாக கூறியுள்ளனர். இதேபோல் சிகாகோ பல்கலைக் கழக ஆய்வறிக்கையின் படி 20 வயதுகளில் இருக்கும் பெண்கள் மிகக்குறைவாகவே உச்சட்ட சிலிர்ப்பு நிலையை அடைகின்றனர் என்றும் 40 வயதுகளில் இருக்கும் பெண்களே அதிகமாக அந்நிலையை அடைகின்றனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இளமைக் காலத்தில் உறவுக்கு அழைப்பதில் ஆண்கள் முன்னுரிமை தருகின்றனர். ஆனால் நடுவயதில் பெண்தான் ஆர்வம் மிகுந்தவளாக இருப்பாள். இதற்குக் காரணம் ஆண் பெண் இருவர் உடலிலும் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோன்தான். வயதாகும் போது ஆணுக்கு இவையிரண்டும் அளவில் குறையத் தொடங்கும். ஆனால் பெண் உடலில் டெஸ்டோஸ் டெரோனின் குறைவை ஈஸ்ட்ரோஜன் ஈடுகட்டுகிறது. எனவேதான் ஆணை விடவும் பெண் நடுவயதில் அதிக ஆர்வம் கொண்டவளாக இருக்கிறாள்.
இளவயதினை விட வயது முதிரும் போது மோகத்திற்கு பார்வை மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. தொடு உணர்ச்சிகளே அந்நிலைக்குத் தூண்ட முடியும். எனவே தான் இவ்வயதுகளில் நிதானமும் செயல்திறனும் இவ்விஷயத்தில் உதவிகரமாக இருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
»»  read more
புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா