இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/11/2014

கற்பழிப்பு செய்த நபர் ஆணுறுப்பு அறுத்து வாய்க்குள் வைக்கப்பட்டு கொலை (Photos) வயது வந்தவர்கள்

பாலியல் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட நீதி என்கிற தலைப்பில் வந்து உள்ள இப்பதிவு குற்றம் செய்ய நினைப்பவர்களையே அச்சப்பட வைப்பதாக உள்ளது.

இந்நபர் மருமகளை பல தடவைகள் கற்பழித்து இருக்கின்றார். இன்னும் சில சிறுமிகளையும் கற்பழிக்க முயன்று இருக்கின்றார்.

இவரின் கொடுமையை தாங்க முடியாத உறவினர்கள், நண்பர்கள் சட்டத்தை கைகளில் எடுத்துக் கொண்டார்கள்.




»»  read more

10/25/2013

மனைவியை நிர்வாணமாக்கி தாக்கிய கணவன்: ஆர்ப்பாட்டத்தையடுத்து கைது


இந்தியாவில் தானேவில் குடிபோதையில் மனைவியை நிர்வாணமாக்கி கூர்மையான ஆயுதத்தால் தாக்கிய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 
இச்சம்பவம் குறித்து தெரியவருவது, மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிவான்டியைச் சேர்ந்தவர் கமால் அன்சாரி(30). அவருக்கு தனது 28 வயது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு வந்த அன்சாரி தனது மனைவியை வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்துள்ளார்.
 
தெருவில் வைத்து அவரை நிர்வாணமாக்கி கூர்மையான ஆயுதத்தால் அவரின் உடலில் பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார்.
 
இதில் காயம் அடைந்த அந்த பெண் பிவான்டியில் உள்ள இந்திரா காந்தி நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
இந்த விவகாரத்தில் அன்சாரி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அவருக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரக் கோரி நேற்று போராட்டம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து பொலிஸார் அன்சாரியை நேற்று கைது செய்துள்ளனர்.
»»  read more

10/06/2013

மாணவி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை


பாடசாலை மாணவியொருவர் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டமை தொடர்பாக படல்கும்புரை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மாணவியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய இளைஞர் அப்பகுதியிலிருந்து தலைமைவாகியிருப்பதாகவும் விரைவில் அவ்விளைஞனை கைது செய்யவுள்ளதாகவும் பொலிஸார் நம்பிக்கை தெரிவித்தனர்.

படல்கும்புரைப் பகுதி பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த 16 வயது நிரம்பிய மாணவியே பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டவராவார்.

குறிப்பிட்ட மாணவி படல்கும்புரை அரசினர் மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
»»  read more

8/23/2013

பெண் புகைப்பட பத்திரிகையாளர் பலாத்காரம்


மும்பையில் பிரபல பத்திரிகை ஒன்றில் புகைப்படப் பத்திரிகையாளராக பணியாற்றிவரும் பெண் ஒருவர், வேலை நிமித்தமாக தனது நண்பருடன் சக்திமில் பகுதிக்கு சென்றுள்ளார்.


அப்போது அந்தப் பகுதியில் இருந்த இளைஞர்கள் இவர்களை சூழ்ந்துள்ளனர். உடனிருந்த நண்பரை அடித்து துரத்திய அந்த கும்பல், அந்த பெண்ணை அங்கேயே பாலியல் பலாத்காரம் செய்தது. 



அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அந்த பெண்ணை இளைஞர்களிடம் இருந்து மீட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து தப்பியோடி குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். 



இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மும்பை உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல், பலாத்கார சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும். குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். தற்போது அந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றார். 



இதுதொடர்பாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, இது கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். காவல்துறை உயரதிகாரிகள் குற்றவாளிகளை பிடிக்க தீவிர முயற்சி செய்து வருகின்றனர். 



சக்தி மில் அருகே வேலை நிமித்தமாக சென்ற பெண் பத்திரிகையாளரை சிலர் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளோம். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றார். 



இச்சம்பவம் தொடர்பாக 5 பேர் மாதிரி புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். மேலும் இதுதொடர்பாக 20 பேரை கைது செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க 18 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
»»  read more

8/17/2013

பெண்களின் உள்ளாடைகளை திருடிய இளைஞன் கைது


பெண்கள் மற்றும் சிறுவர்களின் உள்ளாடைகளை திருடி, அவற்றை உடுத்திப்பார்த்த இளைஞனை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை மேலதிக நீதவான் பிரஹசா ரணசிங்க உத்தரவிட்டுள்ளார்.

ரத்மலானை, சில்வெஸ்டர் வீதியிலுள்ள வீட்டுக்குள் புகுந்து அங்கு காயப்போடப்பட்டிருந்த பெண்களின் உள்ளாடைகள் மற்றும் சிறுவர்களின் ஆடைகளையே குறித்த நபர் திருடி உடுத்திப்பார்த்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை பொலிஸார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்திய போதே அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவின் மூலமாகவே குறித்த சந்தேகநபர் இனங்காணப்பட்டாத தெரிவித்த பொலிஸார். அந்த இளைஞன் ரத்மலானை 5 ஆம் குறுக்கு வீதியில் வசிப்பவர் என்றும் தெரிவித்தனர்.
Bas : TM
»»  read more

8/01/2013

16 வயது சிறுமியை 58முறை குத்திக் கொன்று, பிணத்துடன் உறவு கொண்ட கொடூரன் .


லண்டன் பிளாக்பூல் பகுதியைச் சேர்ந்த சாஷா மார்ஸ்டன்(வயது 16) என்பவருடன், டேவிட் மின்டோ(வயது 23) என்ற நபர், பேஸ்புக் மூலம் நட்பாக பழகியுள்ளார்.இதனையடுத்து தனது தோழியின் ஓட்டலில் நல்ல வேலை வாங்கி தருவதாக கூறி, சாஷாவை அழைத்துள்ளார்.
அவரும் கிளம்பி வரவே, ஓட்டலுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.இதற்கு சாஷா அனுமதிக்காத காரணத்தினால், கத்தியை எடுத்து குத்தியுள்ளார். தலையில் மட்டும் 58 முறை கொடூரமாக குத்தியுள்ளார்.

இருப்பினும் வெறி அடங்காமல், இறந்த உடலுடன் உறவு கொண்டுள்ளார். இதனையடுத்து சாஷாவை தீ வைத்து கொளுத்தியதுடன், எரிந்த உடலை ஒரு பெரிய துணியில் கட்டி பார்சலாக்கி கிராப்டன் ஓட்டல் அருகே போட்டு விட்டார்.

அதன் பின்னர் பொலிஸார் நடத்திய விசாரணையில், டேவிட்டை கைது செய்தனர்.விசாரணை முடிந்து தற்போது டேவிட்டுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

»»  read more

அசாம் மாநிலத்தில் 8 வருடங்களில் 13,000 பெண்கள் மீது துஷ்பிரயோகம்


இந்தியாவின் அசாம் மாநிலத்தில் கடந்த எட்டு வருடங்களில் சுமார் 13,000 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறிப்பாக 2005 - 2013 மே மாதம் வரை 12,857 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, அவர்களில் 59 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அம் மாநில அரசின் தகவல்கள் குறிப்பிடுகின்றன. 

மேலும் 8,181 பாலியல் பலாத்கார வழங்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ள அதேவேளை, இது தொடர்பில் 12,216 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மாநில அரசின் தகவல்கள் கூறுகின்றன. 

இவ்வாறான குற்றங்கள் அதிகரிக்க சனத்தொகைப் பெருக்கம், பாலினப் பாகுபாடு, குடும்ப சிக்கல்கள், வறுமை, வேலை இன்மை போன்றவையே காரணம் என கூறப்படுகின்றது. 

மேலும் பாலியல் துன்புறுத்தல்கள் மட்டுமல்லாது வரதட்சனை கொடுமைக்கும் இங்குள்ள பெண்கள் ஆளாக நேரிடுகிறது. 

இவ்வாறாக வரதட்சனை சார்ந்த குற்றச்சாட்டுக்களில் மாத்திரம், அந்த மாநிலத்தில் 1,671 பேர் கைதாகியுள்ளனர். 

இதேவேளை அசாம் மாநிலத்தில் கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. 

பெண்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் 19,902 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அதில் 14,488 திருமணம் தொடர்பானவை. இவற்றில் 9,032 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 113 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அரச தகவல்கள் குறிப்பிடுகின்றன. 

இவற்றில் பெரும்பாலான கடத்தல்கள் திருமணத்திற்காகவே இடம்பெறுவதாவும், அவற்றில் சில இறுதித் தருணத்தில் சமரசம் செய்து வைக்கப்படுவதாகவும் அரச தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
»»  read more

7/31/2013

மாணவிகள் இருவரை நிர்வாணமாக படம்பிடித்த ஆசிரியர் கைது

மாணவிகள் இருவரை நிர்வாணமாக படம்பிடித்த ஆசிரியர் ஒருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.


தம்புத்தேகம பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றைச்சேர்ந்த மாணவிகள் இருவரையே குறித்த பாடசாலையை சேர்ந்த ஆசிரியர் நிர்வாணமாக படம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக உடற்கூற்று சான்றிதழை பெற்றுகொள்வதற்காக மாணவிகள் இருவரையும் கொழும்புக்கு அழைத்துவந்த ஆசிரியர் பியகம பகுதியில் வாடகைக்கு அமர்த்திய அறையொன்றில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திவிட்டே நிர்வாணமாக படம்பிடித்துக்கொண்டாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவிகள் இருவரும் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து பியகம பொலிஸார் ஆசிரியரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
Bas : TM
»»  read more

7/20/2013

சிறுமி மீது 57 வயதான முதியவர் பாலியல் துஷ்பிரயோகம்


வீதியால் சென்ற ஒன்பது வயது சிறுமியை கடத்திச்சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 57 வயதான நபரொருவரை பொலிஸார் தேடிவருகின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருக்கோவில் விநாயகபுரம் பகுதியிலேயே இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

விநாயகபுரம் 4 ஆம் பிரிவு, சென்றல் வீதியைச் சேர்ந்த குறித்த சிறுமி சம்பவதினமான நேற்று தனது வீட்டில் இருந்து அவருடைய பெரியம்மா வீட்டிற்கு மாலை 5 மணியளவில்  சென்றுள்ளார்.

அப்போது அந்தவீதியால் வந்த மாணிக்கப் பிள்ளையார் வீதியைச் சேர்ந்த 57 வயதான நபர் சிறுமியை பாலடைந் வீட்டுக்குள் பலவந்தமாக இழுத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திவிட்டு சிறுமியிடம் 100 ரூபா பணத்தை வழங்கி இதனை வெளியில் செல்லவேண்டாம் என்று கூறிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இந் நிலையில் அழுது கொண்டு வீட்டிற்குச் சென்ற சிறுமி நடந்தவற்றை தாயாரிடம் கூறியுள்ளார். இது தொடர்பில்  தாயார் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பணித்ததுடன் தலைமறைவான நபரை தேடிவருவதாக அறிவித்துள்ளனர்.
»»  read more

7/19/2013

பணத்துக்காக சொந்த மகளையே பலாத்காரத்திற்கு உட்படுத்த உதவிய தாய்



25000 ரூபாய் பணத்துக்காக பெற்ற மகளையே காமுகன் ஒருவனுக்கு இறையாக்கிவிட்டு காவல் இருந்துள்ளார் ஒரு பெண். பதறவைக்கும் இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடியை சேர்ந்தவர் கோமதி, இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன்பின் கோமதி தஞ்சாவூர் ரெட்டியார்பாளையத்தில் வசிக்கிறார். 

இவரது மூத்த மகள் 12ஆம் வகுப்பு படிக்கிறார். தன்னுடைய தாயின் நடவடிக்கை பிடிக்காததால் 2வது மகள் பவித்ரா தனது பெரியம்மா வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறாள். 

அதே ஊரைச் சேர்ந்த டெய்லர் லெட்சுமணன் கோமதிக்கு உறவினர். இந்நிலையில் தன் மகள் பவித்ராவை திருமணம் செய்து கொடுப்பதாக கூறி லெட்சுமணனிடமிருந்து 25,000 ரூபாய் வாங்கியுள்ளார் கோமதி. 

இந்த திருமணத்திற்கு பவித்ரா சம்மதிக்கவில்லை. படித்து டாக்ராக வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் கோமதியோ, இதற்கு மேல் உன்னை என்னால் படிக்க வைக்க முடியாது, ஒழுங்காக என் பேச்சைக் கேட்டு திருமணத்திற்கு ஒத்துக்கொள் என்று தினமும் கட்டாயப்படுத்தி வந்திருக்கிறார். 

இந்நிலையில், உன் மகளை எனக்கு திருமணம் செய்து கொடு அல்லது பணத்தை திருப்பி கொடு என்று லட்சுமணன் ஒரு புறம் டார்ச்சர் செய்து வந்தாராம். இதையடுத்து கடந்த 7ஆம் திகதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 

மைனர் பெண்ணிற்கு திருமணம் நடப்பதாக பொலிசில் புகார் செய்யப்பட்டதை அடுத்து பொலிசார் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பியுள்ளனர். 

தனது திட்டம் நிறைவேறாததால் ஆத்திரமடைந்த கோமதி, என் வீட்டுக்கு வந்து என் மகளை பலாத்காரம் செய்து விடு. வேறு வழியில்லாமல் உன்னை திருமணம் செய்ய சம்மதித்து விடுவாள் என்று லெட்சுமணனுக்கு ஐடியா கூறியுள்ளார். 

அதன்படி, கடந்த 9ஆம் திகதி இரவு கோமதி வீட்டுக்கு வந்த லெட்சுமணனை, பவித்ராவின் அறைக்கு அனுப்பிவிட்டு வெளிப்பக்கமாக கதவை தாழிட்டுக் காவலுக்கு உட்கார்ந்திருக்கிறார் கோமதி. 

உள்ளே சென்ற லெட்சுமணன் சிறுமியை கத்தி முனையில் மிரட்டி வாயைப் பொத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மறுநாள் காலை நடந்த சம்பவத்தை தன் உறவினர்களிடம் சிறுமி கூறியிருக்கிறார். 

அவர்கள், விஷயம் வெளியே தெரிந்தால் மாணவியின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளனர். தகவல் அறிந்த சைல்டு லைன் அதிகாரிகள் நேரில் வந்து விசாரித்துவிட்டு உடனே தஞ்சை எஸ்.பி. தர்மராஜிடம் முறைப்பாடு கொடுத்துள்ளனர். 

எஸ்.பி. உத்தரவின் பேரில் மகளிர் பொலிஸ் நிலைய பொலிஸார், கோமதி மற்றும் பலாத்காரம் செய்த லெட்சுமணன் ஆகியோரை கைது செய்துள்ளனர். 

சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
»»  read more

7/15/2013

பாலியல் புகார் , பாதிரியாருக்கு 10 வருடங்கள் சிறை


வடக்கு அயர்லாந்தை சேர்ந்த, ஜேம்ஸ் மார்டின் டொனாகி என்ற கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியாருக்கு 10 வருடங்கள் சிறைத் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. 

சிறுவர்களிடம் பாலியல் உறவு வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட இவருக்கு எதிராக, பெல்பாஸ்ட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

அதன் மீது நடந்த விசாரணையின் போது தான் எந்தவித குற்றமும் செய்யவில்லை என அவர் மறுத்தார். 

பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதை தொடர்ந்து அவருக்கு 10 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 

17 பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக அவருக்கு இத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
»»  read more

7/13/2013

ஒரு வயது குழந்தையை பலாத்காரம் செய்த கொடூரம்!



உத்தர பிரதேச மாநிலத்தில் 1 வயதான குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியவரை பொலிசார் கைது செய்துள்ளனர். 

உத்தர பிரதே மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியை குற்றங்கள் மற்றும் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கருதப்படுகிறது. 

இந்நிலையில், புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் 1 வயது பெண் குழந்தையை ஒருவர் கற்பழித்த கொடூரம் நடந்துள்ளது. 

அந்த குழந்தையை கற்பழித்தவரை பொலிசார் கைது செய்ததாக தெரிவித்தனர். 

இக்கொடூரதிற்கு ஆளான குழந்தையின் உடல்நலம் மோசமானதால் உயர் சிகிச்சைக்காக அக்குழந்தையை மீருட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
»»  read more

தாதி குளிக்கும்போது படம்பிடித்தவர் கையும் மெய்யுமாக மாட்டினார்


கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதியொருவர் குளித்துக்கொண்டிருக்கும் போது தனது கையடக்கதொலைபேசியின் ஊடாக படம்பிடித்த வைத்தியசாலை ஊழியர் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையிலுள்ள தாதி ஓய்வறையில் குறித்த தாதி குளித்துக்கொண்டிருந்தபோது அறையிலுள்ள உயரமான யன்னல் ஓட்டையில் தனது கையடக்க தொலைப்பேசியை பயன்படுத்தி படம்பிடித்த சுகாதாரப்பிரிவு உதவியாளரான 
பொலநறுவையைச்சேர்ந்த ஜோசப் யூப் ரொசான் என்பவரே இவ்வாறு பணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

குறித்த சந்தேகநபரை மாளிகாகந்த மேலதிக நீதவான் ரஷந்த கொடவெல முன்னிலையில் கடந்த 10 ஆம் திகதி புதன்கிழமை ஆஜர்படுத்திய போதே அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரவு கடமையிலிருந்த தாதி கடமைகளை முடித்துக்கொண்டு இரவு 9 மணியளவில் தாதி ஓய்வறையில் குளித்துக்கொண்டிருந்துள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்தஅறையிலுள்ள உயரமான யன்னலின் ஊடாக கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி யாரோ தான் குளித்துக்கொண்டிருப்பதனை படம் பிடிப்பதை அல்லது வீடியோ ஒளிப்பதிவு செய்வதனை அவதானித்துள்ளார்.
கூச்சல் குழப்பமிடாத தாதி, திடீரென பாய்ந்து கையடக்க தொலைபேசியையை அபகரித்துவிட்டார்.

இதனையடுத்து அதுதொடர்பில் மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.  பொலிஸார் குறித்த கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி  நபரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்  இந்நிலையிலேயே அவர் பணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Bas TM
»»  read more

7/11/2013

மாணவனுடன் உறவுகொண்ட ஆசிரியை : மேற்குலகில் கொடுமை


17 வயது மாணவனுடன் உறவுகொண்ட குற்றச்சாட்டில் கைதான 27 வயது ஆசிரியர் நெருக்கடி நிலையை எதிர்கொண்ட சம்பவம் ஸ்கொட்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

எப்பி ஸ்பரங் டோவ்சன் என்ற 27 வயது ஆசிரியையே நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளார்.

இவ் ஆசிரியை 17 வயது மாணவனுடன் உறவுகொண்ட குற்றச்சாட்டில் கடந்த டிசெம்பர் மாதம் 21 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரது வழக்கு விசாரணை  ஸ்கொட்லாந்து நீதிமன்றில் எடுத்துகொள்ளப்பட்டபோது  மேற்படி ஆசிரியையும் மாணவனும் காரொன்றின் முன்னிருக்கையில் இருந்தவாறு உறவுகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. 

பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது  மேற்படி இருவரையும் அவதானித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த ஆசிரியருக்கு சிறை தண்டனை விதிக்காமல் 6 மாத சமூக சேவையை தொடரவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதேவேளை, இவ் ஆசிரியை  பாலியல் குற்றவாளிகளுக்கான பதிவுப் புத்தகத்தில் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு கையொப்பம் இடவேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இவ் ஆசிரியையின் செயற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஆசிரியர் 4 தடவைகள் மனநல ஆலோசனைகளை பெற்றுள்ளதாக உளவாளி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனூடாக அவருக்கு உளவியல் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
»»  read more

6/29/2013

4 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற நபருக்கு துக்கு


இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டம் குவாரி கிராமத்தை சேர்ந்த பப்ளி என்ற 4 வயது சிறுமி கடந்த வருடம் ஏப்ரல் மாதம் காணாமல் போனாள். 

சிறுமியை காணாமல் தேடி அலைந்த நிலையில், மறுநாள் அவளது சடலம் அருகில் உள்ள நிலத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

பின்னர், மோப்ப நாயின் துணையுடன் பொலிசார் தேடியதில் ரஞ்சித் (23) என்பவனை அது கவ்வி பிடித்தது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவன் மீது பாரபங்கி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் அந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் 4 வயது சிறுமியை கெடுத்து கொன்று வீசியது உறுதியானது. இதையடுத்து குற்றவாளியான ரஞ்சித்துக்கு நீதிபதி ராஜேஷ் சிங் மரணதண்டனை வழங்குவதாக தீர்ப்பு அளித்தார்.
»»  read more

6/27/2013

அட்டாளைச்சேனையில் 12 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு விளக்கமறியல்


TM : அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 12 வயதுடைய  மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி;.சரவணராஜா நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அம்மம்மாவுடன் வாழ்ந்து வருகின்ற தரம் 12 வயதுடைய தனது மூத்த மகளை 33 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையார்  கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக இருந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட சிறுமி அம்மம்மாவுடன் பொலிஸாரிடம் புதன்கிழமை மாலை முறைப்பாடு செய்ததை அடுத்து, தந்தையை கைது செய்யப்பட்டு நேற்று வியாழக்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, குறித்த நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
»»  read more

ஓடும் காரில் வைத்து இரு பெண்கள் பலாத்காரம்


டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவக் கல்லூரி மாணவியை ஒடும் பஸ்சில் 6 பேர் கொண்ட ஒரு கும்பல் கொடூரமாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த பெண் 13 நாட்களுக்குப் பிறகு இறந்துவிட்டார். 

நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வலுவான சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் டெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறைந்தபாடில்லை. 

இதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில், டெல்லி அருகே உள்ள குர்கானில் இரண்டு பெண்கள் ஓடும் காருக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 

டெல்லியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில், மெஹ்ராலி-குர்கான் சாலையில் உள்ள ஒரு மது விடுதிக்கு வெளியே நின்றுகொண்டிருந்தனர். 

அப்போது அந்த வழியாக காரில் வந்த நபர்கள், லிப்ட் தருவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளனர். காரில் சென்றுகொண்டிருக்கும்போது அதில் இருந்த நபர்கள், அந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு அந்த நபர்களின் பிடியில் இருந்து விடுபட்ட பெண்கள் இருவரும், தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளனர். 

அதன் அடிப்படையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 நபர்கள் மற்றும் கார் டிரைவரை தேடி வருகின்றனர். 

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
»»  read more

6/22/2013

மனைவியை 300 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூர கணவன்!


பிலிமதலாவ , இம்புல்கம பிரதேசத்தில் இரவு நேரத்தில்  தனது காதலியின் வீட்டினுள் புகுந்த நபரொருவர் அவரது தந்தையின் ஆணுறுப்பை வெட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவரெனக் கூறப்படும் சந்தேக நபர் தனது காதலியை சந்திக்கும் பொருட்டு இரவு நேரத்தில் அவரது வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

இதனை அப் பெண்ணின் தந்தையார் காணவே இருவருக்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் ஆத்திரமடைந்த அந்நபர் காதலியின் தந்தையின் ஆணுறுப்பை வெட்டியுள்ளார்.

இதில் காயமடைந்த அப்பெண்ணின்  தந்தை  82 வயதானவரெனவும் அவர் தற்போது கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக கடுகண்ணாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சந்தேக நபரையும் தேடிவருகின்றனர்.

»»  read more

6/19/2013

பேஸ் புக்´ மூலம் சீரழிந்த பெண் : ராஜஸ்தானில் சம்பவம்


பேஸ்புக்கில் அறிமுகமான, 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி, அந்த வீடியோவை இணையதளத்தில் பரவவிட்ட இளைஞரை பொலிஸார் தேடிவருகின்றனர். 


இந்தியாவின், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் இருந்து சுமார் 150 கி.மீட்டர் தூரத்தில் உள்ள அல்வர் பொலிஸ் நிலையத்தில் 15 வயது சிறுமி ஒருவரின் தந்தை நேற்று ஓர் புகார் மனுவினை அளித்தார். 



அதில் அவர் கூறியுள்ளதாவது, 



´எனது மகளுடன் ´பேஸ் புக்´ மூலம் பழகிய அல்வர் பகுதியை சேர்ந்த சமீர் குமார் என்பவன் சில மாதங்களுக்கு முன்னர் தனிமையை பயன்படுத்தி அவளை பாலியல் பலாத்காரத்திற்கு விட்டான். 



அத்துடன் இந்த காட்சிகளை கையடக்கத் தொலைபேசி மூலம் வீடியோவாக பதிவு செய்துக்கொண்ட அவன், அதை வைத்தே என் மகளை தொடர்ந்து பயமுறுத்தி உறவு வைத்துக்கொண்டான். 



தற்போது அந்த காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளான். அதை இணையதளத்தில் பார்த்த எங்கள் உறவினர் இந்த தகவலை என்னிடம் கூறினார். 



மைனர் பெண்ணை ஏமாற்றி, மிரட்டி, கற்பழித்து, அந்த காட்சிகளை இணைய தளத்திலும் பரப்பிய சமீர் குமாரை கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்´ 



என்று அந்த மனுவில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தந்தை கூறியுள்ளார். 


இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிசார் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

அன்பிற்குரிய பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளையும் கண்காணியுங்கள் : Sammanthurai web)
»»  read more

2012ல் மாத்திரம் 8541 சிறுமிகள் துஷ்பியோகம்!


இந்தியாவில் கடந்த ஆண்டில் (2012) மாத்திரம் 8541 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்திய தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிக்கையின் படி ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவது அதிகரிக்கப்பட்டு வருவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இந்தியாவில் 2007ம் ஆண்டு 5045 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்த எண்ணிக்கை 2008ல் 5446 ஆக உயர்ந்து, 2009ல் 5336 ஆக குறைந்துள்ளது. 

எனினும், 2010ல் 5484 ஆக உயர்ந்து 2011ல் 7112 ஆக எகிறி, கடந்த (2012) ஆண்டு 8541 சிறுமிகள் காமுகர்களுக்கு விருந்தாகியுள்ளனர் என்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 

இதேவேளை, இந்த 6 ஆண்டுகள் கணக்கெடுப்பில், 2007ம் ஆண்டைத் தவிர்த்து, ஏனைய ஐந்து ஆண்டுகளிலும் இந்திய மத்திய பிரதேச மாநிலம் தான் சிறுவர் துஷ்பிரயோகத்தில் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மத்திய பிரதேசத்தில் 2007ம் ஆண்டில் 1043 சிறுமிகளும், 2008ல் 892 சிறுமிகளும், 2009ல் 1071 சிறுமிகளும், 2010ல் 1182 சிறுமிகளும், 2011ல் 1262 சிறுமிகளும், கடந்த (2012) ஆண்டில் மட்டும் 1632 சிறுமிகளும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 
»»  read more
புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா