இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/19/2013

பிரசவத்தை எளிதாக்கும் நவீன கருவி கண்டுபிடிப்பு


அர்ஜென்டினாவை சேர்ந்த கார் மெக்கானிக் ஜோர்ஜ் ஓ டன். இவர் பிரசவத்தை எளிதாக்கும் நவீன கருவியை கண்டுபிடித்துள்ளார். 

இந்த கருவிக்கு உலக சுகாதார நிறுவனம் விருது வழங்கியுள்ளது. இவர் நண்பர்களுடன் விருந்து சாப்பிட்ட போது ஒயின் பாட்டிலின் உள்ளே கார்க் போய்விட்டது. 

ஆனால் பந்தயத்திற்காக ஜோர்ஜ் பாட்டிலின் உள்ளே பிளாஸ்டிக் பையை நுழைத்தபின் ஊதிப் பெரிதாக்கியதில் கார்க் பிளாஸ்டிக் பைக்குள் மாட்டிக் கொண்டு, இழுத்ததும் அழகாக வெளியில் வந்துவிட்டது. அன்று இரவு தூக்கத்திலிருந்து திடுமென விழித்த ஜோர்ஜ் தனது மனைவியிடம் சம்பவத்தை விவரித்த பின் குழந்தையை இந்த பிளாஸ்டிக் பை முறையில் வெளியில் எடுப்பது எளிதான பிரசவ முறையாக இருக்கும் என்று கூறினார். 

அடுத்தநாள் காலையில் ஜோர்ஜ், அவரது நண்பருடன் ஒரு மகப்பேறு மருத்துவரை சந்தித்து புதிய கருவியை பற்றி கூறினார். அந்த மருத்துவர் ஜோர்ஜின் புதிய கருவி செயல்பாட்டை தனது மருத்துவமனையில் சோதனை செய்துபார்க்க உதவினார். 

இதையடுத்து அந்த மருத்துவர் யூடியூப் இணையதளத்தில் சோதனையை வெளியிட்டு பின் ஜோர்ஜை 2008ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் மகப்பேறு துறையின் தலைவர் டாக்டர் மரியோ மரியால்டி யை சந்தித்து பேசவைத்தார். 

காப்பி குடிக்கும் நேரத்தில் 10 நமிடங்கள் தன்னை சந்திக்க அனுமதி அளித்த டாக்டர் மரியோ கண்டுபிடிப்பை பார்த்து 2 மணிநேரம் ஜோர்ஜ் உடன் பேசினார். இதுகுறித்து டாக்டர் மரியோ கூறியதாவது: 

மகப்பேறு காலங்களில் பெண்கள் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். அவற்றில் ஒன்று பிரசவ நேரத்தில் குழந்தை கருப்பைக்குள் சிக்கிக்கொள்வது. இதனால் குழந்தை அறுவை சிகிச்சை மூலமாக வெளியில் எடுக்கப்படுகிறது. இந்த சிக்கலான நேரத்தில் மருத்துவர் என்ன பிரச்னை, அதை எப்படி சரிசெய்வது என்று சரியாக முடிவெடுக்கவில்லை என்றால் தாயும் சேயும் இறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. 

சிக்கலான பிரசவ நேரத்தில் உபயோகப்படுத்தும் வகையில் எளிய கருவி இருந்தால் மருத்துவர்கள் பிரசவங்களை எளிதாகவும் சீக்கிரமாகவும் செய்யமுடியும். ஓடன் கருவி என்று பெயரிடப்பட்ட இந்த கருவி அர்ஜென்டினாவை சேர்ந்த ஜோர்ஜ் ஓ‘டன் என்ற 59 வயது கார் மெக்கானிக் கண்டுபிடித்தது. 

இதன்மூலம் எளிதாக பிரசவம் நடக்க கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவர்கள் உதவ முடியும். இதில் கையால் பிடிக்கும் வகையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பை உள்ளது. உராய்வை குறைக்க லூப்ரிகன்ட் செலுத்தப்பட்ட இந்த பை காற்று நிரப்பும் வகையில் உள்ளது. இதன்மூலம் சிக்கலான பிரசவத்தில் குழந்தை வெளிவராத போது குழந்தையின் தலையை சுற்றி இந்த பிளாஸ்டிக் பையை வைத்து காற்றால் நிரப்பவேண்டும். 

இதனால் தலையை சுற்றி பிளாஸ்டிக் பை கெட்டியாக பிடித்துக்கொள்ளும், பின்னர் மெதுவாக வெளியில் இழுத்தால் குழந்தை பத்திரமாக பிரசவிக்கப்படும். 

இதன்மூலம் மிக சிக்கலான பிரசவங்கள் கூட எளிதாக நடைபெறுகிறது. இந்த கருவியை உலக சுகாதார நிறுவனம் அர்ஜென்டினா கர்ப்பிணி பெண்களிடம் சோதித்துப் பார்த்ததில், சுகமான பிரசவம் நடந்துள்ளது. இதனால் சிசேரியன் அறுவை சிகிச்சைகள் குறையும். 

இந்த முறையை இந்தியா சீனா மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவில் பயன்படுத்த உள்ளோம். இதன்மூலம் பிரசவ நேரத்தில் ஏற்படும் சிக்கல்களினால் இறக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களை காப்பாற்ற முடியும். ஒரு ஆண்டில் பிரசவ நேர சிக்கல்களினால் பிறக்கும் குழந்தைகளில் 56 லட்சம் குழந்தைகள், 2,60,000 பெண்கள் இறக்கிறார்கள். 

இதைத் தயாரிக்க 50 டாலர்கள் ஆகிறது. இந்த கருவியை கனடாவை சேர்ந்த கிரான்ட் சேலஞ்சஸ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பென்டன் டிக்கின்சன் கம்பெனியுடன் சேர்ந்து தயாரிக்க உள்ளது. ஏழை நாடுகளில் இந்த கருவி அதிக அளவில் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார். 
»»  read more

8/16/2013

உங்கள் புகைப்படங்களை இலகுவான முறையில் வடிவமைப்பதற்கு சிறந்த இணையத்தளங்கள்


உங்கள் புகைப்படங்களை மிகவும் அழகான முறையில் வடிவமைப்பதற்கு Photoshop போன்ற Graphic Designing  Softwares செய்ய தெரிந்திருக்க வேண்டும்.அவ்வாறு Photoshop போன்ற  Designing  Softwares செய்ய தெரியாதவர்களுக்கே இந்த பதிவு. உங்களுடைய புகைப்படங்களை மிகவும் அழகான முறையில் Effect கொடுத்து இலகுவாக வடிவமைப்பதற்கு பல இணையத்தளங்கள் உள்ளன அவற்றில் சிறந்த ஆறு இணையத்தளங்கள் பற்றி பார்ப்போம்.

1.www.funny.pho.to முதலில் இந்த இணையத்தளத்திற்கு சென்று  அங்கே உங்களுக்கு பிடித்த ஒரு Photo Effect ஐ  தெரிவு செய்யவும் 
  • பின்பு அடுத்த பக்கத்தில் நீங்கள் தெரிவு செய்த Photo Effect வரும் அதில் Please select a photo என்பதற்கு கீழே From Disk என்பதில் கிளிக் செய்து உங்கள் கணினியில் இருந்து ஒரு போட்டோவை தெரிவு செய்யவும் பின்பு உங்களுடைய போட்டோ தானாகவே நீங்கள் தெரிவு செய்த PhotoEffect-இல் வடிவமைக்கப்பட்டு விடும். பின்பு உங்கள் போடோவிற்கு கீழே Save,Share என்று இருக்கும் அதில்  கிளிக் செய்து உங்களுடைய போட்டோவை கணினியில்  Save செய்து கொள்ளலாம்.


கீழே  உள்ள ஐந்து தளங்களும் இதே போன்றுதான் உங்களுக்கு விரும்பிய தளத்துக்கு சென்று உங்களுடைய புகைப்படங்களை வடிவமைத்துக்கொள்ளவும் 






இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இது பற்றி தெரியாத உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும்!

»»  read more

3/07/2013

கூகுள் குரோமின் இன் ஷார் கட் கீக்களை அறிந்து கொள்ளுங்கள்

Google Chrome தான் இன்று மிக அதிகமானோர் பயன்படுத்தும் ப்ரௌசெர். பல வித வசதிகளோடு வரும் இதில் நாம் பயன்படுத்த ஏராளமான Keyboard Shortcuts உள்ளன. இவை நம் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகின்றன. இந்த பதிவில் நாம் அறிந்திருக்க வேண்டிய 35 – Keyboard Shortcuts பார்ப்போம்.

Ctrl+N புதிய விண்டோ ஓபன் செய்ய
Ctrl+T புதிய Tab ஓபன் செய்ய
Ctrl+O குறிப்பிட்ட File ஒன்றை ChormeChrome – இல் ஓபன் செய்ய.
Ctrl+Shift+T கடைசியாக Close செய்த Tab – ஐ ஓபன் செய்ய.
Ctrl+1 முதல் Ctrl+8 குறிப்பிட்ட Tab க்கு செல்ல
Ctrl+9 கடைசி Tab க்கு செல்ல
Ctrl+Tab or Ctrl+PgDown அடுத்த Tab க்கு செல்ல
Ctrl+Shift+Tab or Ctrl+PgUp முந்தைய Tab க்கு செல்ல
Alt+F4 or Ctrl + Shift + W தற்போதைய விண்டோவை Close செய்ய.
Ctrl+W or Ctrl+F4 தற்போதைய tab அல்லது pop-up ஐ Close செய்ய.
Backspace முந்தைய பக்கங்களுக்கு செல்ல
Shift+Backspace Next Page க்கு செல்ல (ஓபன் செய்து இருந்தால்)
Alt+Home Home Page க்கு செல்ல
Alt+F or Alt+E or F10 Chrome Crunch மெனுவை ஓபன் செய்ய
Ctrl+Shift+B Bookmarks Bar – ஐ தெரிய/மறைய வைக்க
Ctrl+H History page – ஐ ஓபன் செய்ய
Ctrl+J Downloads page – ஐ ஓபன் செய்ய
Shift+Esc Task Manager – ஐ ஓபன் செய்ய
F6 or Shift+F6 URL, Bookmarks Bar, Downloads Bar போன்றவற்றை Highlight செய்ய. [எது இருக்கிறதோ அது தெரிவு ஆகும்]
Ctrl+Shift+J Developer Tools – ஐ ஓபன் செய்ய
Ctrl+Shift+Delete Clear Browsing Data – வை ஓபன் செய்ய
F1 Help Center – ஐ ஓபன் செய்ய
Ctrl+L or Alt+D URL ஐ Highlight செய்ய
Ctrl+P தற்போதைய பக்கத்தை பிரிண்ட் செய்ய
Ctrl+S தற்போதைய பக்கத்தை சேவ் செய்ய
F5 or Ctrl+R Refresh செய்ய
Esc Loading – ஐ நிறுத்த
Ctrl+F find bar – ஐ ஓபன் செய்ய
Ctrl+U தற்போதைய பக்கத்தின் Source Page – ஐ பார்க்க
Ctrl+D குறிப்பிட்ட பக்கத்தை bookmark செய்ய
Ctrl+Shift+D ஓபன் ஆகி உள்ள எல்லா பக்கங்களையும் Bookmark செய்ய
F11 Full-screen க்கு மாற்ற அல்லது Full Screen – இல் இருந்து Normal க்கு திரும்ப
Space bar பக்கத்தை Scroll down செய்ய
Home பக்கத்தின் Top க்கு செல்ல
End பக்கத்தின் Bottom க்கு செல்ல
»»  read more

2/19/2013

கணினி நினைவகத்தை பாதுகாக்க விரும்புபவர்கள் கவனத்திற்க்கு


கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சனைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி, அப்படி ரீஸ்டார்ட் செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போன்ற பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்துவிடும்.
மனிதன் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய்ய முடியும். எனவே வரும் முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தான் Check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும் இதன் மூலம் உங்கள் Hard Disk இன் மோசமான நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால் உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது.
இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும் நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம். கொஞ்சம் கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆனால் இதை செய்வதன் காரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம்ப்யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய்து கொள்ளுங்கள்.
Check Disk செய்யும் முறை:
1. My Computer உள்ளே நுழைந்து C Drive மீது Right Click செய்து Properties செல்லவும்.
2. அடுத்து வரும் குட்டி விண்டோவில் Tools என்ற Tab-ஐ தெரிவு செய்யவும். இதில் Error Check என்பதில் “Check Now” என்பது இருக்கும். அதை கிளிக் செய்யவும். இதற்கு அடுத்து கீழே உள்ள விண்டோ வரும்.
3. இதில் முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண்டறிந்து Automatic ஆக சரி செய்து விடும். இரண்டாவது ஒன்று உங்கள் Disk இன் Bad Sector களை scan செய்து அவற்றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண்டாவது option சேர்த்து click செய்தால் Check Disk க்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒன்று. நேரம் ஆனாலும் இதையும் செய்வது நலம்.
4. இப்போது கிளிக் செய்து விட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்த Window வரும்.
உங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டுள்ளது. எனவே இதனை இப்போது செய்ய முடியாது எனச் சொல்லி, அடுத்த முறை கம்ப்யூட்டர் Start ஆகும் போது செய்யவா எனக் கேட்கும். அதற்கு வட்டமிடப்பட்டுள்ளதை கொடுத்து விடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check Disk வேலைகள் ஆரம்பிக்கும்.
5. இந்த வேலை முடியும் வரை கம்ப்யூட்டர் OFF ஆகக்கூடாது. எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள். மோசமான பகுதிகளை கம்ப்யூட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள்ளும், இதனால் பிரச்சினை எதுவும் இல்லை. இது முடிந்தவுடன் உங்கள் Hard Disk இன் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விடும். உங்கள் Hard Disk குறித்த விவரங்கள் Check Disk முடிந்த உடன் காண்பிக்கப்படும்.
6. மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இருக்கும் நேரத்திலயே செய்ய முடியும். ஆனால் C ட்ரைவை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட்ரைவ்) Check Disk க்கு உள்ளாக்குவதுதான் Hard Disk க்கு பயனுள்ளது.
Hard Disk-ஐ பரமரிப்பது முக்கியமான கடமை. எனவே முதலில் chkdsk (Check Disk)செய்து Hard Disk-ஐ காப்பாற்றுங்கள்.
»»  read more

1/13/2013

உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க

For NOKIA s40 users;   *Creat a folder named, " xyz.jad " in memory card  *Copy some Videos, images & Mp3 to that folder  *Creat another folder named, " xyz.jar " in memory card  *Automatically, " xyz.jad " folder will be hidden..   !!.If u want to get back that folder.!!  *Rename " xyz.jar " folder to " xyz "  *then, " xyz.jad " folder will be UnHidden..  ...Njoy   For NOKIA s60 Users & others;
உங்கள் மொபைல் போனில் உள்ள சில படங்கள் அல்லது வேறு ஏதும் ஆவணங்கள் போன்றவற்றை தேவையில்லாதவர்கள் பார்ப்பதை தடுக்க நீங்கள் JAVA Applications உள்ள எந்தவொரு கைத்தொலைபேசியையும் பயன்படுத்தலாம்.
கீழே உள்ளதை பின்பற்றவும்.

01. நீங்கள் எந்த Folder இல் உள்ள ஆவணங்களை பிறர் கண்களில் இருந்து மறைக்க வேண்டுமென எண்ணுகின்றீர்களோ அந்த Folder தெரிவு செய்யவும்.

02) இப்பொழுது அந்த Folder க்கு உங்களுக்கு விரும்பிய பெயரில் Rename செய்யவும். இதன்போது இறுதியில் “ .jad “ என்றுவருமாறு Rename ஐக் கொடுக்கவும். (உதாரணமாக: Images.jad )

03) இப்பொழுது அதே இடத்தில் (same directory) புதியதொரு Folder ஐ உருவாக்கி அதற்கு அதே பெயரில் ஆனால் பின்னால் “.jar “ என வருமாறு கொடுக்கவும். (உதாரணமாக:Images.jar )

04) அவ்வளவுதான்! உங்கள் தேவையான Folder மறைக்கப்பட்டு புதிதாகத் திறந்த New Folder மட்டும் தென்படும்.

இப்போ உங்கள் மொபைலில் உள்ள பிரத்தியேகமான ஆவணங்கள் பிறர் கண்ணில் படாமல் மறைக்கப்பட்டுவிடும்.
மீண்டும் அந்த ஆவணங்களை பார்க்கவேண்டுமெனில் நீங்கள் இரண்டாவதாக உருவாக்கிய New Folder ஐ (உதாரணமாக: Video.jar ) அழித்திவிடவேண்டியதுதான்.
»»  read more

பிரிட்டனின் முதலாவது கை-மாற்று அறுவை சிகிச்சை


தனது வலது கையில் உள்ள விரல்களை அசைத்துப் பார்க்க முடிவதைப் பார்த்து வாயில் சிரிப்புடன் கண்களில் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியுடன் மார்க் காஹில் பேசுகிறார்.
51 வயதான அவருக்கு ஒருவாரத்துக்கு முன்னர்தான் கை-மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பிரிட்டனில் முதல் தடவையாக அறுவை சிகிச்சை மூலம் புதிதாக மனிதக் கையொன்றைப் பொருத்திக்கொண்டுள்ள முதல் நபர் இவர்தான்.
பிரிட்டனில் லீட்ஸ் மருத்துவமனையில் எட்டு மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையின் போதுதான் இவரது பழைய கை அகற்றப்பட்டு புதிதாக கொடையாளி ஒருவர் வழங்கியிருந்த கையொன்று அவருக்குப் பொருத்தப்பட்டது.
20 ஆண்டுகளுக்கு முன்னர் இவரது காலிலும் விரல்களிலும் மூட்டுவாதம் ஏற்பட்டது. பின்னர் அதுவே 5 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது வலது கைக்கும் பரவியது. அவரது கை விரல்களை விரிக்கமுடியாதபடி, கையினால் எதனையும் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது.

'எனது கை'

பயோனிக் என்ற நவீன செயற்கை முறை இயந்திரக் கையை பொருத்துவது தான் ஒரே வழி என்று இருந்தபோது தான், இவர் இன்னொரு மனிதக் கையை பொருத்தும் கை-மாற்று அறுவை சிகிச்சை செய்துபார்க்கச் சம்மதித்தார்.
இவருக்கு புதிய கையை பொருத்திய மருத்துவ நிபுணர் பேராசிரியர் சைமன் கே, இவரது புதிய கையில் இன்னும் பெரிய முன்னேற்றம் தெரியும் என்று பிபிசியிடம் நம்பிக்கை தெரிவித்தார்.
கை மாற்று சிகிச்சைகள் அமெரிக்காவிலும் பிரான்சிலும் இதற்கு முன்னர் நடந்திருக்கின்றன. உலகெங்கிலும் இவ்வாறான 60 கை-மாற்று சிகிச்சைகள் இதுவரை நடந்துள்ளன.
லீட்ஸ் மருத்துவமனையில் இப்போது நடந்திருக்கின்ற பிரிட்டனின் முதலாவது முயற்சி, கை கால்களை இழந்துள்ள பலருக்கு இதுபோல உதவமுடியும் என்கிற நம்பிக்கையை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது.
பிரிட்டனில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் இந்த கை-மாற்று சிகிச்சைக்கான திட்டமிடல்கள் நடந்துவந்தன.
பிரிட்டன் மருத்துவத் துறையின் இந்தக் கன்னி முயற்சிக்கு பொருத்தமான ஒருவர் கிடைக்கும்வரை காத்திருந்தார்கள்.
உடல்நிலையில் பொருத்தமானவராகவும் இன்னொருவரின் கையை பொருத்திக்கொள்ளுமளவிற்கு மனதளவில் தயாரானவராகவும் ஒருவர் கிடைக்க வேண்டி இருந்தது.
'இதனை இன்னொருவரின் கை என்று நான் நினைக்கவே இல்லை. எனது கையைப் போலத்தான் நான் உணர்கிறேன். என்னால் எனது கையைபோல அசைக்கமுடிகிறது.. அப்படித்தான் உணர்கிறேன்' என்று பிபிசியிடம் கூறினார் மார்க் காஹில்.
இவரது ஆசை முழுமையாக நிறைவேற இன்னும் காலம் எடுக்கும். ஆனால் இப்போதே அவரால் விரல்களை அசைத்துப்பார்க்க முடிகிறது என்பதே ஒரு பெரிய தெம்பையும் நம்பிக்கையையும் கொடுக்கிறது.
»»  read more

1/07/2013

பெண்களின் பாதுகாப்புக்கு பலம் சேர்க்கும் ரோபாட் காலணி.!


பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையில் ஈடுபடுவர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள ரோபாட் காலணியை உருவாக்கி உள்ளனர் மராட்டிய மாநிலம் தானேயைச் சேர்ந்த பள்ளிக்கூட மாணவிகள்.


இந்த காலணியின் அடிப்பகுதியில் 5 வோல்ட் மின்னழுத்தம் இருக்கக்கூடிய மின்சார சுற்று பொருத்தப்பட்டுள்ளது, சமூக விரோதிகள் யாரினும் நெருங்கி வந்தால் காலணியை 2 முதல் 3 தடவை தரைப்பகுதியில் வேகமாக உதைத்து அழுத்தம் கொடுத்தால், மின்சார சுற்று செயல்பட தொடங்கிவிடும். அப்போது காலணியில் பொருத்தப்பட்ட வயர்லஸ் அலாரம் ஒலி எழுப்பும். 

மேலும் ப்ளூடூத் சேவை மூலம் நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதி மற்றும் எங்கே இருக்கிறார்கள் என்பது உள்ளிட்ட தகவல்களை உடனடியாக தெரியப்படுத்தவும் செய்யும், விமானத்தில் உள்ளதைப்போல கருப்புப்பெட்டியும் பொருத்தப்பட்டிருகிறது, 

அது அங்கே நிகழும் சம்பவத்தை முழுமையாக பதிவு செய்யும். பாதுகாப்புக்காக, மிளகாய்ப்பொடி, தற்காப்பு கலைகள்னு பிரத்யேக தயார் நிலைக்கு இடையே எப்போதும் கூடவே இருக்கும் இந்த காலணிகள், சிறந்த பாதுகாப்பு ஆயுதம் என்கின்றனர் இதை உருவாக்கிய பள்ளி மாணவிகள். 

இவர்கள், 9 - ஆம் வகுப்பு மற்றும் 7- ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் நீங்கள் அறிவிக்க விரும்பினால் கீழ் உள்ள F என்பதை அழுத்தி Facebook மூலம் அறிவிக்கலாம்
»»  read more

ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகளை அறிமுகப்படுத்தியது தோஷிபா

தோஷிபா சமீபத்தில் தனது 3 புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகளை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த டேப்லெட்டுகள் எக்ஸைட் வரிசையில் வருகின்றன. இந்த 3 டேப்லெட்டுகளும் ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதளம்இ 1.3 ஜிஹெர்ட்ஸ் க்வட்கோர் என்விடியா டேக்ரா 3 ப்ராசஸர் மற்றும் 1ஜிபி ரேம் கொண்டுள்ளன.

எக்ஸைட் 13 டேப்லெட் 1600×900 பிக்சல் ரிசலூசன் கொண்ட 13.3 இன்ச் ஆட்டோ ப்ரைட் பேக்லிட் எல்இடி டிஸ்ப்ளேஇ 5 எம்பி பின்பக்க கேமராஇ 2 எம்பி முகப்பு கேமராஇ மைக்ரோ எச்டிஎம்ஐஇ மினி யுஎஸ்பி மற்றும் முழு எஸ்டி கார்டு ஸ்லாட் ஆகிய அம்சங்களைக் கொண்டு வருகிறது. இதன் பேட்டரி இந்த டேப்லெட்டுக்கு 13 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. மேலும் இந்த எக்ஸைட் 13 டேப்லெட் 32ஜிபி மற்றும் 64ஜிபி என இரண்டு மாடல்களில் வருகிறது.

அடுத்ததாக எக்ஸைட் 10 டேப்லெட் 1280 ஒ 800 பிக்சல் ரிசலூசனுடன் 10.1 இன்ச் டயகோனல் ஆட்டோ ப்ரைட் எல்இடி பேக்லிட் டிஸ்ப்ளே கொண்டு வருகிறது. இந்த டிஸ்ப்ளே மல்டி டிஸ்ப்ளே வசதி கொண்டது. மேலும் இந்த டேப்லெட் 5 எம்பி பின்பக்க கேமராஇ 2 எம்பி முகப்பு கேமராஇ மைக்ரோ யுஎஸ்பிஇ மைக்ரோ எச்டிஎம்ஐ மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இதன் எடை 598 கிராம் மட்டுமே.

இறுதியாக வரும் எக்ஸைட் 7.7 டேப்லெட் 7.7 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளேயுடன் வருகிறது. மேலும் 5 எம்பி பின்பக்க கேமராஇ 2 எம்பி முகப்பு கேமராஇ மைக்ரோ யுஎஸ்பிஇ மைக்ரோ எச்டிஎம்ஐ மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் போன்ற வசதிகளை இந்த டேப்லெட் கொண்டிருக்கிறது.

இந்த 3 டேப்லெட்டுகளும் வரும் ஜூன் மாதத்தில் விற்பனைக்கு வர இருக்கின்றன. எக்ஸைட் 13.3ன் 32ஜிபி டேப்லெட் 649 அமெரிக்க டாலர்களுக்கும்இ 64ஜிபி டேப்லெட் 749.99 அமெரிக்க டாலர்களுக்கும் விற்பனையாகும்.

எக்ஸைட் 10ன் 16ஜிபி டேப்லெட் 449.99 அமெரிக்கா டாலர்களுக்கும்இ 32ஜிபி டேப்லெட் 529.99 அமெரிக்க டாலர்களுக்கும் மற்றும் 64ஜிபி டேப்லெட் 649 அமெரிக்க டாலர்களுக்கும் விற்பனையாகும்.

இறுதியாக எக்ஸைட் 7.7ன் 16ஜிபி டேப்லெட் 499.99 அமெரிக்க டாலர்களுக்கும்இ 32ஜிபி டேப்லெட் 579 அமெரிக்க டாலர்களுக்கும் விற்பனையாகும்.
»»  read more

12/30/2012

அப்பிளின் அதி நவீன (i)Watch

தொழிநுட்ப உலகில் புதுமையான படைப்புகளை புகுத்தி அதற்கு எம்மை அடிமையாக்குவது ஓன்றும் அப்பிள் நிறுவனத்திற்கு புதிதல்ல.   அதேபோல் அதன் புதுமையான சாதனங்கள் வெளியாக முன்னரே அவை தொடர்பில் செய்திகள் வெளியிடுவது ஒன்றும் ஊடகங்களுக்கும் புதியதல்ல.  ஐபோன், ஐ பேட், வரிசையில் ஐ(கடிகாரம்) ஒன்றை அப்பிள் இரகசியமாக தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இக் கடிகாரமானது 1.5 அங்குல தொடுதிரையைக் கொண்டிருப்பதுடன் புளூடூத் மூலம் ஐ போன் போன்ற சாதனங்களுடன் தொடர்புகொள்ளும் வசதியையும் கொண்டிருக்குமென ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.    குறித்த கடிகாரத்தின் திரையானது இண்டியம் டின் ஒக்சைட் (Indium tin oxid) பூச்சைக் கொண்ட மேற்பரப்புடன் கூடிய ஓ.எல்.ஈ.டி வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.  ஐ.ஓ.எஸ் மூலம் இக்கடிகாரம் இயங்குமெனவும் இதனூடாக அப்ளிகேசன்களை தரவிறக்கம் செய்துகொள்ளமுடியும் என நம்பப்படுகின்றது.  இன்னும் உத்தியோகபூர்வமில்லா இச் சாதனம் தொடர்பில் தொழிநுட்ப உலகின் கவனம் தற்போது திரும்பியுள்ளது. இதேவேளை இதேபோன்ற தொழிற்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய பெபெல் என்ற கடிகாரம் கூடிய விரைவில் விற்பனைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
»»  read more
புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா