இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/07/2013

சம்மாந்துறை தேசிய பாடசாலையில் கௌரவிப்பு நிகழ்வு (Photos)

(எம்.ரீ.எம்.பர்ஹான்)
விஞ்ஞான  அபிவிருத்திக்கான அகில இலங்கை மண்றத்தினால் தேசிய ரீதியாக நடத்தப்பட்ட புத்தாக்கப் போட்டியில் சம்மாந்துறை முஸ்லீம் மத்திய மாஹா வித்தியாலய தேசிய பாடசாலை சார்பாக வெற்றியீட்டிய மாணவர்களை கொளரவிக்கும் நிகழ்வு அன்மையில் சம்மாந்துறை தேசிய பாடசாலையில் இடம் பெற்றது.

இன் நிகழ்வில் வெற்றியீட்டிய மாணவர்களான எம்.எம.அறூஸ் மற்றும் ஏ.ஆர்.எம். மில்ஹான் ஆகியோருக்கான சான்றிதழ்களை சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எம். ஜலீல் வழங்கி வைப்பதையும் அருகில் பாடசாலை அதிபர் எச்.எம். பாறுக் உட்பட ஆசிரியர்களையும் காணலாம்.





»»  read more

12/05/2013

சம்மாந்துறையில் புலமை வெற்றியாளர்களை பாராட்டும் விழா

(தாஹ நளீம் ,ஹனீபா )

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை பாராட்டு நிகழ்வு சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் 2013.12.04 இன்று நடைபெற்றது.

இந் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ரீ.எம். தௌபீக் அவர்களின்  தலைமையில் நடைபெற்றதுடன்  பிரதம அதிதியாக சம்மாந்துறையின் புதிய வலயக்கல்விப் பணிப்பாளர் ஆளுயு. ஜலீல்இ மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான றகீம்,ஆர்ஆ. லாபீர், உதவிக் கல்விப் பணிப்பாளர் காதர் மற்றும் சமாதனக்கல்வி இணைப்பாளர். ஏ.ஏ. முகம்மட், ஆசிரிய ஆலோசகர்  கைறுன்னிஸா அகமட் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் மாணவர்களை வளப்படுத்திய ஆசிரியர்களான  றகீமா மன்சூர், ஏ.பீ. பரீதா, எஸ்.எல். மன்சூர்,  அமீறா றிம்லான் ஆகியோருடன் இணைந்து சித்தி பெற்ற 41 மாணவர்களுக்கு நினைவுச்சின்னமும் ஆசிரியர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது.

இம்முறை கூடுதலான மாணவர்களை சித்தியடை வைத்த பெருமையும் இப்பாடசாலையைச் சாறும். அத்துடன் 190 புள்ளிகளைப் பெற்ற மாணவனான யுசுணு. ஹனீன் அவர்களுக்கு விசேட பாராட்டுக்களும் பெற்றோர்களால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்குரிய ஏற்பாடுகளை  அதன் பிரதி அதிபர் ஏ.எம்.தாஹாநழீம் முன்னின்று நடத்தினார்.

இந்நிகழ்வினை சித்தியடைந்த மாணவர்களின் பெற்றார்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது.



»»  read more

12/03/2013

நிர்மாணத்துறையில் சாதனை படைத்த சம்மாந்துறை மாணவன் (Photos)


(எம்.ரீ.எம்.பர்ஹான்)
நிர்மாணத்துறையில் அளவிட முடியாத உயரத்தை அளவிடும் கருவியை கண்டுபிடித்து தேசிய மட்டத்தில் முன்றாம் இடத்தை பெற்று சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மாஹா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவன் முகம்மது மில்ஹான் சாதனை படைத்தள்ளார்.

இன் நிகழ்வு 2013.11.30,2013.12.1,2 ஆகிய தினங்களில் கொழும்பு பண்டார் நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. இவர் கிழக்கு மாகானத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவன் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.



»»  read more

11/06/2013

புலமைப்பரிசில் ,சான்றிதழ் வழங்கும் நிகழ்வு


புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னோடியாக முகையடீன் கல்வி அமைப்பினால் நடாத்தப்பட்ட பரீட்சை பெறுகளின் அடிப்படையில் அதில் கூடுதலான புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் அவர்களின் அதிகமானோர் தேசிய புலமைப்பரிசில் பரீட்சையில் அதனை ஒத்த புள்ளிகளைப் பெற்றார்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். 
இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 01.11.2013  (வெள்ளி) ஆந் திகதி பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் தலைமையில் நடைபெற்றதுடன் திறமை காட்டிய மாணவர்களுக்கான சான்றிதழினை தரம் 5 வகுப்பிற்கு கற்பித்த ஆசிரியர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டது அவர்களாவன திருமதி மன்சூர றஹீமா, திருமதி றிம்லான் அமீறா, திருமதி ஏ. பீ. பரீதா,  எஸ். எல். மன்சூர் ஆகியோருமாகும்.

இம்முறை இப்பாடசாலையில் 41 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததுடன மாவட்டத்தில் ஏ.எம். ஸிஹானுல் ஹனீன் 190 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றார் என்பது குறிப்பித்தக்கதாகும். அவர் இப்பரீட்சையில் 192 புள்ளகளைப் பெற்றுள்ளார். 

தகவல் ஏ.எம். தாஹாநழீம் - பிரதி அதிபர்.


»»  read more

10/22/2013

முன்மாதிரியான புலமை கௌரவிப்பு நிகழ்வு


(ஏ.எம். தாஹாநழீம்)
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வுகள் பல்வேறு இடங்களில் நடைபெற்றுக்கொண்டிருப்பது சமகால நிகழ்வாகும். அந்த வகையில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த சகோரர்கள் முஸ்லிம் மாணவர்களையும் சேர்த்து அவர்களுக்கு பெறுமதியான பரிசில்களை வழங்கி கௌரவித்த முன்மாதிரி நிகழ்வொன்று இன்று காலை (19.10.2013 -சனிக்கிழமை) மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது..

மேலும்,  சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலய மாணவன் அ.ற. ஸி. ஹனீன் (அம்பாறை மாவட்டத்தில் தமிழ்மொழி மூலம் முதலாம் நிலை – 190 புள்ளிகள்) என்பவருக்கு பெறுமதியான பரிசில்களை வழங்கி கௌரவித்தார்கள் என்பது இங்கு முக்கியமான நிகழ்வாகும். அத்துடன் மேலும் பல முஸ்லிம் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.

இந்நிகழ்வினை தமிழர் மக்கள் தேசிய முன்னணி என்ற அமைப்பு ஏற்பாடு செய்தது அத்துடன் அதன் தலைவர் கஜேந்திர குமார் பொண்ணம்பலம் அவர்கள் தலைமை தாங்க பிரதம அதிதியாக Dr. கோனாமலை கோனேசப்பிள்ளை (கல்விக் கலாநிதி பொலம்பியா பல்கலைக்கழகம், தத்துவ கலாநிதி – மால்பரோ பல்கலைக்கழகம் -இங்கிலாந்து) மற்றும் முஸ்லிம் மகளிர் வித்தியாலய அதிபர் ரீ.எம்.தௌபீக், பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் ஆசிரியையான ஏ.பீ.பரீதாவும் கலந்து கொண்டதுடன் பல சிறப்பு அதிதிகளும் இந் நிகழ்வை சிறப்பித்தார்கள்.

இவ்வாறான நிகழ்வின் ஊடாக கடந்த காலங்களில் சிதைக்கப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம் உறவுகளில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுவதுடன் வரவேற்கப்பட வேண்டியதுமாகும்.


»»  read more

10/08/2013

சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் புலமைப்பரிசில் பரீட்சையில் 41 மாணவர்கள் சித்தி (Photos)


(ஏ.எம். தாஹாநழீம்)
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்மொழி மூலம் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலய மாணவன் அப்துல் றகீம் முகம்மட் சிஹானுல் ஹனீன் – 190 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாம் இடத்தை தட்டிக்கொண்டதுடன் மேற்படி பாடசாலையில் 41 பிள்ளைகள் சித்தி பெற்று மற்றுமொரு சாதனையும் படைத்துள்ளது.

இச்சாதனையைப் பெற்றுக்கொள்ள அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றார்கள் அயராது பாடுபட்டனர்.




»»  read more

10/01/2013

புலமைப் பரீட்சையில் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் மாவட்ட சாதனை


(ஏ.எம். தாஹாநழீம்- பிரதி அதிபர்)
நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையில் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலய மாணவன் அப்துல் றஹீம் முகம்மட் சிஹானுல் ஹனீம் மாவட்டத்தில் 190 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினைத் தட்டிக்கொண்டார்.  இதுவரை கிடைக்கப் பெற்ற முடிவுகளின் படி இப்பாடசாலையில் 41 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள் என்பதையும் இங்கு கோடிட்டுக்காட்ட வேண்டும். இவரின் இந்த வெற்றிக்கு அதன் அதிபர் ரீ.எம். தௌபீக், பிரதி அதிபர், ஏ. எம். தாஹாநழீம், ஆசிரியையான ஏ.பீ. பரீதா ஆகியோர் அயராது உழைத்தார்கள்

முதன்மை பெற்ற மாணவரின் சுட்டென்  6936580 ஆகும்.

»»  read more

7/12/2013

அகில இலங்கை தமிழ்மொழி தினப் போட்டியில் தங்கம் வென்றார்

(ஏ.எம். தாஹாநழீம்)
சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் -5ல் கல்வி பயிலும் செல்வன், தாஹிர் முகம்மட் அப்றாஸ் 2013  அகில இலங்கை தமிழ்மொழித்தினப் போட்டியில்  பிரிவு -1 ற்கான வாசிப்பு போட்டியில் முதலாமிடத்தை தட்டிக்கொண்டார்.

இந்தப் போட்டி 06.07.2013  ஆந் திகதியன்றி கொழும்பு றோயல் கல்லூரயில் நடைபெற்றது.

இவர். முகம்மட் தாஹிர் எம்.ஏ. ஜாபிரா (ஆசிரியை) ஆகியோரின் மகனுமாவார்.

இந்த வெற்றியின் ஊடாக சம்மாந்துறை வலயமும், சம்மாந்துறை முஸ்லி்ம் மகளிர் வித்தியாயத்தின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பாடசாலைச் சமூகமும்  வெகுவாகப்பாராட்டப்படுகின்றார்கள். அத்துடன்  இந்த வெற்றியைப் பெற்றுக்கொள்ள அதன் பிரதி அதிபரான ஏ.எம். தாஹாநழீம் பல்வேறு வகையிலும் இந்த மாணவனுக்கு உதவியாக இருந்தார் என்பதை சுட்டிக்காட்டுதல் பொருத்தமாகும்.
»»  read more

5/22/2013

அகில இலங்கை தமிழ்மொழித் தின மாகாண மட்டப் போட்டியில் முதலாமிடம்


(ஏ.எம். தாஹாநழீம்)
சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் -5ல் கல்வி பயிலும் செல்வன் தாஹிர் முகம்மட் அப்றாஸ் 2013 தமிழ்மொழித்தினப்  மாகாண மட்ட பிரிவு -1 ற்கான வாசிப்பு போட்டியில் முதலாமிடத்தை தட்டிக்கொண்டார். 
இவரையும் .இவரைப் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பாடசாலைச் சமூகம் வெகுவாகப்பாராட்டுகிறது.
»»  read more

5/06/2013

அல்குர்ஆன் மனனப்போட்டியில் இலங்கை சிறுவன் முதலிடம்

குவைத் பாராளுமன்ற உறுப்பினர், சபாநாயகர் முகம்மத் அப்துல் முஹ்ஸின் கராபியினால் ஒவ்வொரு வருடமும் நடாத்துகின்ற அல்குர்ஆன் மனனப் போட்டியில் அரபி அல்லாதவர்களுக்கான ஒரு ஜூஸ்உ மனனப் பிரிவில் இலங்கை, மீயல்லை பகுதியியைச் சேர்ந்த மாணவன் அப்துல் அஸீஸ் ஹரீஸ் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.  இதற்கான பரிசை குவைத் சபாநாயகரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.  கல்வி அமைச்சினூடாக நடாத்தப்பட்ட பாடசாலை மட்டப் போட்டிகள் மற்றும் குவைத் பெரிய பள்ளிவாசல் நடாத்திய போட்டிகள், கடந்த ரமழான் மாதம் குவைத் IPC நிறுவனம் நடாத்திய அரை ஜூஸ்உ மனனப் பிரிவிலும் இம்மாணவன் முதலாம் இடங்களை தட்டிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
»»  read more

4/13/2013

சம்மாந்துறை அல் அர்சத் மகா வித்தியாலயத்தில் இவ்வருடம் தோற்றிய மாணவர்களில் முதல் 5 இடங்களை பெற்றுக்கொண்டவர்கள்.

(எம் ரீ எம்.பர்ஹான்)
சம்மாந்துறை அல் அர்சத் மகா வித்தியாலயத்தில் இவ்வருடம் தோற்றிய மாணவர்களில் முதல் 5 இடங்களை பெற்றுக்கொண்டவர்கள்.

1 S. இக்ராம் ஹுசைன் - 6A,2B,1S
2 MM.சித்தி ஹாஜரா - 6A,1B,2C
3 AJF.நிஸ்ரிய - 4A,3B,1C,1S
4 MC.திஷனா  பானு - 3A,2B,3C,1S
5 MM.ரிப்னாஸ் - 3A,2B,1C,3S

முழுமையான விபாரங்கள் கீழ் உள்ள வரைபடத்தில் காணலாம்.
(படத்தை பெரிதாக்க அதன் மேல் கிளிக் செய்யவும்)

»»  read more

3/01/2013

உயர்தர விஞ்ஞானப் பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்ற மாணவிக்கு பாராட்டு நிகழ்வு


-ஹனீபா-
அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ;ணா தேசிய பாடசாலை மாணவி தணிகாசலம் தர்ஷிக்கா உயர்தர விஞ்ஞானப் பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் நான்காவது இடத்தையும் பெற்றுக் கொண்டமையை கௌரவிக்கும் முகமாக அக்கரைப்பற்று மக்கள் வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழா (28.02.2013) அதிபர் எம்.கிருபைராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளர் ஐ.சோமச்சந்திர, வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.குணாலன், உதவி வங்கிப் பாதுகாப்பு அத்தியட்சகர் ஆர்.சிறிவேல்ராஜா, அக்கரைப்பற்று முகாமையாளர் எம்.ஏ.எம்.நஸீர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் கணக்காளர் கே.கணகரத்தினம், உறுப்பினர்களான வீ.சுகிர்தகுமார், கே.விஜயபாலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு பிராந்திய முகாமையாளர் ஐ.சோமச்சந்திரா உரையாற்றுகையில் எமது நிறுவனம் நிதியை மட்டும் கருத்தில் கொண்டு செயற்படும் நிதி நிறுவனமன்றி சிறந்த மனித வளங்களை உருவாக்குவதற்கும் இவ்வாறான மாணவர்களை ஊக்குவிப்பதிலும் உதவி வழங்குவதிலும் முன்னின்று செயற்பட்டு வருகின்றது எனத் தெரிவித்தார். அத்துடன் இம்மாணவி தணிகாசலம் தர்ஷிக்கா வங்கியில் பயிற்சி பெறுவதற்காக உடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
  
»»  read more

2/01/2013

உயர்தர விஞ்ஞானப் பிரிவில் அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி


(ஹனீபா)
நேற்றைய முன்தினம் தினம் வெளியாகிய உயர் தரப் பரீட்சை முடிவுகளின்படி அக்கரைப்பற்று ஸ்ரீ ராமகிறிஷ;னா தேசிய பாடசாலையின் மாணவி தனிகாசலம் தர்ஷிக உயர்தர விஞ்ஞானப் பிரிவில் 3ஏ சித்திபெற்று மாவட்டமட்டத்தில் முதலாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் நான்காவது இடத்தையும் பெற்று பாடசாலைக்கும் அம்பாறை மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இம்மாணவி அக்கரைப்பற்று - 7/3ம் கிராம சேவகர் பிரிவிலுள்;ள நாவலர் வீதியில் வசிக்கும் அதிபர் தனிகாசலம் குமுதா தம்பதியினரின் இரண்டாவது புதல்வியாவார்.

சித்தி பெற்ற மாணவியை கௌரவிக்கும் முகமாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச் பியசேன மாணவியின் இல்லத்துக்கு இன்று (31) காலை விஷயம் செய்து மாணவியை வாழ்த்தியதுடன் நினைவுப் பரிசும் வழங்கி வைத்தார் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ரீ.ஜெயாகர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


»»  read more
புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா