இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/04/2013

அம்பாறையில் வாகன விபத்து பெண் ஒருவர் உயிரிழப்பு


(ஹனீபா)
இன்று (04) செவ்வாய்கிழமை அதிகாலை அம்பாறை கொனாகொல்லை என்ற இடத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகி அம்பாறை பொது வைத்திய சாலையில் அனுமதின்னப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர் சாய்ந்தமருது -05ம் பிரிவைச் சேர்ந்த ஜெமீலா அனூன் காரியப்பர் வயது-65 என்பவராகும் இவருடைய ஜனாஸா அம்பாறை பொது வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இக்குடும்பம் கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்த வேளையிலே இன்று அதிகாலை 3.30 மணியளவில் அம்பாறை கொனாகொல்ல பிரதேச நெடுஞ்காலையிலுள்ள பள்ளம் ஒன்றில் வீழ்ந்த போதே இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மரணித்த இவர் கல்முனைப் பட்டின சபையின் முதாலாவது தவிசாளராக பதவி வகித்த மாஹூம் இஸ்மாயில் காரியப்பரின் மூத்த புதல்வியும் முன்னாள் பொலிஸ் அதிகாரி மர்ஹூம் ஜெமீல் ஜெமீல் காரியப்பரின் மனைவியுமாவார் அத்துடன் கல்முனை மாநகர பிரதி முதல்வர் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமான சிரேஷ;ட சட்டத்தரணி நிசாம் காரியப்பரின் மாமியுமாவார்.

இவருடைய ஜனாஸா இன்று மாலை சாய்ந்தமருது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாகவும் மருமகன் எஸ்.எம்.அஜ்வத் தெரிவித்தார்.
»»  read more

5/12/2013

சவூதி அரேபியாவின் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண் வபாத்


சவூதி அரேபியாவின் மதீனா நகரில் இடம்பெற்ற  வாகன விபத்தில் இலங்கையை சேர்ந்த பணிப் பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் ஹிதாயத் நகரைச் சேர்ந்த வெள்ளக்குட்டி முஹைதீன் ஜனூபா (வயது 39) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். 

திருமண வைபவமொன்றிற்கு கடந்த வியாழக்கிழமை  சென்றுகொண்டிருந்தபோதே இந்த வாகன விபத்து இடம்பெற்றதென்று தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாக விபத்தில் மரணமடைந்தவரின் சகோதரி வெள்ளக்குட்டி முஹைதீன் ஹஸீனா தெரிவித்தார்

மேலும், இந்த வாகன விபத்தில் ஏறாவூரைச் சேர்ந்த பெண் உட்பட வீட்டு எஜமானியும் அவரது 3   குழந்தைகளும் மரணமடைந்துள்ளனர்.
Bsa TM
»»  read more

2/25/2013

குவைத் வாகன விபத்தில் தோப்பூர் இளைஞர் வபாத்

குவைத்தில் ஜகர்த்தா நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் தோப்பூர் 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கலீலூல்  ரஹ்மான் றமீஸ் எனும் 27 வயது இளைஞர். வபாத்தாகியுள்ளார் .  இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை இலங்கை நேரப்படி மாலை இடம்பெற்றுள்ளது.
அதேவேளை இவருடன் சென்ற இந்திய கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும்   வபாத்தாகியுள்ளார் .மரணமான கலீல் ரஹ்மான் றமீஸின் தந்தை கடந்த கால வன்செயலின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமானவர் எனவும் குடும்பத்தின் இரண்டு சகோதரிகளையும் கரைசேர்க்க வேண்டிய பொறுப்புக் காரணமாகவே இவர் வெளிநாட்டுக்குச் செல்ல நேர்ந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
»»  read more

12/02/2012

கட்டாரில் வீதி விபத்து - இலங்கை சகோதரர் வபாத்


கட்டார் ரையான் நகரில் இடம் பெற்ற வாகன விபத்தில் சிக்கி மூதூர் பெரிய பாலம் பகுதியைச் சோந்த அப்துல் சலாம் அக்ரம் (வயது - 22) என்பவர் இன்று ஞாயிற்றுக் கிழமை மாலை வபாதாகியுள்ளார். 
கட்டார் - ரையான் நகரில் விற்பனை பிரதிநிதியாக தொழில் புரிந்த இவர், வீதியை கடற்க முற்பட்ட போது வாகனமொன்றினால் மோதுண்டு வபாதாகியுள்ளார். 

விடுமுறையில் வீடு வந்த இவர் கடந்தவாரம் மீண்டும் கட்டாருக்குச் சென்றிருந்த சென்றிருந்த நிலையிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக கட்டாரில் உள்ள அவரது நண்பர்கள் அறிவித்துள்ளனர்.
»»  read more
புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா