இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/28/2014

சுவாமி விபுலானந்தர் நினைவு தின கிரிக்கட் சுற்றுப் போட்டி

(எம் ரீ எம் பர்ஹான்)
சுவாமி விபுலானந்தர் அவர்களின் நினைவு தினத்தை சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு கல்லடி கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் ஏற்பாடு செய்திருந்த மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கு பற்றும் கிரிக்கட் சுற்றுப் போட்டி மிகப்பிரமாண்டமான முறையில் சிவானந்தா  தேசிய பாடசாலை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இந் நிகழ்விற்கு கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி.கிட்ணன் கோவிந்தராஜா பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன், அதிதிகள் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி க.பிறேமகுமார், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக சிரேஷ்ட உதவிப் பதிவாளர் ஏ.ஜே.கிறிஷ்டி உட்பட விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இங்கு SVIAS CHALLENGERS, SVIAS ELEVATION, SVIAS HARMONY, SVIAS CREATION , SVIAS RHYTHMS   ஆகிய அணிகளுக்கிடையே கிரிக்கட் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றது.இதன்போது முதலாம் இடத்தை SVIAS CHALLENGERS அணியினரும், இரண்டாம் இடத்தை SVIAS RHYTHMS அணியினரும் பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கு அதிதிகளால் வெற்றிக் கேடயம் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டது.







»»  read more

6/13/2014

கல்முனையில் மர்ஹும் ஏ.எம்.தௌபீக் ஞாபகார்த்த நோக் அவுட் அடிப்படையிலான இறுதிப்போட்டி

-எம்.ஐ.சம்சுதீன்எம்.வை.அமீர்-
கல்முனை லக்கி ஸ்ட்டார் விளையாட்டுக்கழகத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம், அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையே கடந்த ஒரு மாத காலமாக நடத்தி வந்த நோக் அவுட் அடிப்படையிலான மர்ஹும் ஏ.எம்.தௌபீக் ஞாபகார்த்த அழைப்பு உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி (06.06.2014)  வெள்ளிக்கிழமை கல்முனை சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

11 கழகங்கள் பங்கு பற்றிய மேற்படி சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டிக்கு கல்முனை விர்லியன்ட் விளையாட்டுக்கழகமும் மருதமுனை ஈஸ்ட்டன் யூத் விளையாட்டுக்கழகமும் தெரிவாகி இருந்தது.
அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவரும் கல்முனை மாநகரசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஏ.எம்.றக்கீப் தலைமையில் இடம்பெற்ற இந்த இறுதிப்போட்டியிலும் பரிசளிப்பு விழாவிலும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுதீன் அவர்களும் விசேட அதிதியாக கல்முனைத் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான ஏ.எம்.றியாஸ் அவர்களும் கலந்து கொண்ட அதேவேளை அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.ஐ.எம். அப்துல் மனாப் அவர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

போட்டியில் எந்த அணியும் வெற்றிபெறாததால் பெனால்ட்டி முறையில் மருதமுனை ஈஸ்ட்டன் யூத் விளையாட்டுக்கழகம், மர்ஹும் ஏ.எம்.தௌபீக் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது.


வெற்றி பெற்ற கழகத்துக்கு கௌரவ மற்றும் விசேட அதிதிகள் வெற்றிக்கிண்ணத்தையும் பணப்பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.


»»  read more

3/05/2014

கல்முனை மாநகர சபைக்கு 35 லட்சம் ரூபா பெறுமதியான கழிவகற்றி இயந்திரத் தொகுதி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

-எம்.வை.அமீர்-
கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம்காரியப்பரிர் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சினால கல்முனை மாநகர சபைக்கு 35 லட்சம் ரூபா பெறுமதியான கழிவகற்றி இயந்திரத் தொகுதி ஒன்றுவழங்கப்பட்டுள்ளது.

இதனைக் கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போது உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர்ஏ.எல்.எம்.அதாஉல்லா, கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம்காரியப்பரிடம் குறித்த இயந்திரத்திற்கான ஆவணங்களைக் கையளித்தார்.

இந்நிகழ்வில்உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர்- பொறியியலாளர்எம்.நஸீர், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி ஆகியோரும்பங்கேற்றிருந்தனர்.


»»  read more

2/08/2014

கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகத்தின் வளர்ச்சிக்காக நிதி உதவி வழங்கி வழங்கி வைப்பு

(ஹனீபா)
மருதமுனை மண்னின் பழம் பெரும் விளையாட்டுக் கழகமான கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகத்தின் வளர்ச்சிக்காக அக்கழகத்தின் புதிய போசகராக நியமிக்கப்பட்டடுள்ள 'மை ஹோப்' குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் லயன் சித்தீக் நதீர் -எம்.ஜே.எப் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான காசோலையினை கழகத்தின் தலைவர் வை.கே.கலீலுர்றஹ்மானிடம் வழங்கி வைப்பதையும் அருகில் அக்கரைப்பற்று வலயக் கணக்காளர் கே.றிஸ்வி யஹ்ஷர். மாவட்ட காணிபதிவாளர் ஜமால் முஹம்மட், சட்டத்தரணி ஹாதி உட்பட நிர்வாகிகள் நிற்பதையும் காணலாம்.

»»  read more

2/01/2014

66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு SUFA நடாத்தும் கரிக்கெட் சுற்றுப் போட்டி

66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு Sammanturai United Friends Association நடாத்தும் கரிக்கெட் சுற்றுப் போட்டி  எதிர் வரும்  2014.02.04 ஆம் திகதி சம்மாந்துறை அல் அர்சத் விளையாட்டு மைதானத்தில் இடம் பெறவுள்ளது.

போட்டியில் பங்கு கொள்ளும் அணிகளுக்கான விதிமுறைகள் பின்வருமாறு

* ஓவ்வொரு அணியும் 8 வீரர்களை கொண்ட பெயர்பட்டியலை சமர்பிக்க வேண்டும்.
* அணிக்கு 7 பேர் கொண்ட 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்டது.
* போட்டிகள் யாவும் விலக்கல் முறையில் நடைபெறும்.
* போட்டி சமநிலையில் முடிவடைந்தால் சுப்பர் ஓவர் பயன்படுத்தப்படும்
* பிரீ ஹிட் பயன்படுத்தப்படும்.
* அனைத்து அணிகளும் தனித்தனி பந்து கொண்டுவரல் வேண்டும்.
* பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கை 12 ஆக மட்டுபடுத்பட்டுள்ளதால் வருகையை உறுதிப்படுத்தி கொள்ளவும்.
* அணுமதி கட்டணமாக ரூபா :1200 செலுத்தவேண்டும்.
* நடுவர்களின் தீர்ப்பினை அனைவரும் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
* குறித்த நேரத்திற்கு சமுகமளிக்காத அணிகள் எதுவித அறிவித்தலும் இன்றி நீக்கபடும்.
* கழகசிருடைகள்   இருப்பின்  அணிந்து   விளையாடுவது   விரும்பத்தக்கது.(அரைஇறுதி மற்றும் இறுதிபோட்டிகளுக்கு சீருடை  கட்டாயம்)
* போட்டிகள் யாவும்  2014.02.04 ஆம் திகதி நடைபெறும்.

பின்வரும் விருதுகள் வழங்கபடும்.
Champion & runner up
man of the serious
Man Of The Match
Best Bowler Of The Tournament
Most 6s Of The Tournament
Fair Play Award
Best Fan Of The Tournament
மேலதிக விபரங்களுக்கு
0772633188
0757306696
0772326823

»»  read more

1/28/2014

மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி

(ஹனீபா)

12 கௌனி 2 ஆம் வட்டாரம் பி;ரண்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 5வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட 11 பேர் கொண்ட 10 ஒவர் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி நேற்று  (2014.01.26)  5ஆம் கொளனி அமிர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப் போட்டிக்கு தெரிவான 6ஆம் கொளனி றோயல் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து  வீரத்திடல் அல்-அறபா விளையாட்டுக் கழகம் மோதியது. நாணையச் சுழச்சியில் வெற்றி பெற்ற அல்-அறபா விளையாட்டுக் கழகம் களத்தடுப்பில் ஈடுபட்டனர்.

முதலில் துடுப்படுத்தாட களம் இறங்கிய  6ஆம் கொளனி றோயல் விளையாட்டுக் கழகம் 8.3 ஓவர்களுக்கு சகல விக்கட்களையும் இழந்து 53 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்படுத்தாடிய வீரத்திடல் அல் - அறபா விளையாட்டுக் கழகம் 8.5 ஓவர்களுக்கு 4 விக்கட்களை இழந்து 56 ஓட்டங்களை பெற்று மேலதிக  3 ஓட்டங்களால் வீரத்திடல் அல் - அறபா விளையாட்டுக் கழகம் வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.     

பி;ரண்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபக தலைவரும்; ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச கொள்கைபரப்பு செயலாரும் மெஸ்ரோ அமைப்பின் பிரதேச அமைப்பாளருமான ஏ.எம்.மஹ்ருப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு பிரபல தொழில் அதிபரும் மை ஹோப் நிறுவனத்தின் தவிசாளருமான லயன் சித்திக் நதீர், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக கணக்காளர் எஸ்.றிஸ்வி யஹ்சர்;, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச உயர் பீட உறுப்பினர் ஏ.சீ.நிஸார் ஹாஜி, 12 கௌனி, 2 ஆம் வட்டாரம் கைரியா ஜும்மா பள்ளிவாசல் தலைவர்  ஐ.அலியர், வீரத்திடல் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் இஸ்மாயில் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதன்போது பிரபல தொழில் அதிபரும் மை ஹோப் நிறுவனத்தின் தவிசாளருமான லயன் சித்திக் நதீருக்கு சமூக சேவையை பாராட்டி பி;ரண்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபக தலைவரும்; ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச கொள்கைபரப்பு செயலாரும் மெஸ்ரோ அமைப்பின் பிரதேச அமைப்பாளருமான ஏ.எம்.மஹ்ருபினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கொளரவிக்கப்பட்டது.






»»  read more

1/21/2014

சினேக பூர்வ, இருபதுக்கு இருபது கடினப்பந்து கிரிக்கெட் போட்டி

(எம்.ரீ.எம்.பர்ஹான்)
இளைஞர் விளையாட்டு கழகங்களுக்கிடையிலான சினேக பூர்வ, இருபதுக்கு இருபது கடினப்பந்து கிரிக்கெட் போட்டி அண்மையில் சம்மாந்தறை செந்நெல் சாஹிர மைதானத்தில் இடம் பெற்றது.

இப்போட்டியில் சம்மாந்தறை MUFO இளைஞர் கழகமும் SSC விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய SSC விளையாட்டுக் கழகம் 162 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 163 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சம்மாந்தறை MUFO இழைஞர் விளையாட்டுக் கழகம் 16.2 ஓவர் முடிவில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.
»»  read more

12/31/2013

சினேக பூர்வ, இருபதுக்கு இருபது கடினப்பந்து கிரிக்கெட் போட்டி

(எம்.ரீ.எம்.பர்ஹான்)
இளைஞர் விளையாட்டு கழகங்களுக்கிடையிலான சினேக பூர்வ, இருபதுக்கு இருபது கடினப்பந்து கிரிக்கெட் போட்டி அண்மையில் காரை தீவு பொது மைதானத்தில் இடம் பெற்றது.

இப்போட்டியில் சம்மாந்தறை MUFO இளைஞர் கழகமும் காரை தீவு ஜொலி கிங்ஸ் விளையாட்டு கழகமும் மோதிக் கொண்டன.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய காரை தீவு ஜொலி கிங்ஸ் கழகம் 18 ஒவர் முடிவில் சகல விக்கட்டுக்களை இழந்து 119 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 120 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சம்மாந்தறை MUFO இழைஞர் விளையாட்டு கழகம் 16.4 ஓவர் முடிவில் 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.

»»  read more

12/07/2013

எட்டு வருடங்களுக்குப் பின்னர் மஹேல தம்பதியினருக்கு பெண் குழந்தை!

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவாத்தன – கிறிஸ்டினா சிரிஸேன தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மஹேலவ ஜயவர்த்தனவின் மனைவி கிறஸ்டினா குழந்தை பிறப்பினை எதிர்பார்த்து பாகிஸ்தான் அணியுடனான மட்டுப்படுத்தப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டியில் இருந்து சுய விருப்பின் பெயரில் விலகிக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மஹேலவின் மனைவி பெண் குழந்தை ஒன்று பிரசவித்துள்ளார். மஹேல – கிறிஸ்டினா ஜோடி கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியின் முதல் குழந்தை இதுவாகும்.
தனக்கு பெண் குழந்தை பிறந்ததை மஹேல ஜயவர்த்தன டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
»»  read more

11/25/2013

சம்மாந்துறை முபோ நிந்தவூர் கேன்ஸ் விளையாட்டு கழகத்திற்க்கும் இடையிலான சினேக பூர்வ கிரிக்கெட் போட்டி

(எம்.ரீ.எம்.பர்ஹான்)
சம்மாந்துறை முபோ இளைஞர் விளையாட்டு கழகத்திற்க்கும் நிந்தவூர் கேன்ஸ் விளையாட்டு கழகத்திற்க்கும் இடையிலான சினேக பூர்வ, இருபதுக்கு இருபது கடினப்பந்து கிரிக்கெட் போட்டி ஒன்று நேற்று நிந்தவூர் பொது மைதானத்தில் இடம் பெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை முபோ இளைஞர் விளையாட்டு கழகமும் 20 ஒவர் முடிவில் 6 விக்கட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 159 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நிந்தவூர் கேன்ஸ் கழகம் 16.3 ஓவர் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 97 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. இப்போட்டியில் சம்மாந்துறை MUFO இளைஞர் கழகம் 61 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

»»  read more

11/17/2013

சினேக பூர்வ, இருபதுக்கு இருபது கடினப்பந்து கிரிக்கெட் போட்டியில் சம்மாந்துறை MUFO அணி வெற்றி


(எம்.ரீ.எம்.பர்ஹான்)
இளைஞர் கழகங்களுக்கிடையிலான சினேக பூர்வ, இருபதுக்கு இருபது கடினப்பந்து கிரிக்கெட் போட்டி ஒன்று இன்று சம்மாந்துறை முஸ்லீம் மத்திய மஹா வித்தியலய மைதானத்தில் இடம் பெற்றது.

இப்போட்டியில் சம்மாந்தறை MUFO இளைஞர் கழகமும் கல்முனை AG Stry இளைஞர் கழகமும் மோதிக் கொண்டன.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை MUFO இழைஞர் கழகமும் 20 ஒவர் முடிவில் 5 விக்கட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 185 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை AG Stry இழைஞர் கழகம் 17.5 ஓவர் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 134 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. இப்போட்டியில் சம்மாந்துறை MUFO இளைஞர் கழகம் 50 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

»»  read more

10/06/2013

தமிழ்ப் படத்தில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் பிராவோ


மேற்கிந்தியத் தீவுகள் அணி கிரிக்கெட் வீரரான டிவெய்ன் பிராவோ ‘உலா’ என்ற தமிழ்ப் படத்தில் நடிக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிராவோ ஆட ஆரம்பித்த பிறகு, அவர் தமிழக மக்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

விக்கெட் வீழ்த்தியதும் அவர் ஆடும் நடனம் அனைவரையும் கவர்ந்த ஒன்று. அந்த நடனத்தைப் பார்த்து ‘உலா’ படத்தின் இயக்குனர் ராஜன் மாதவ் அவரை படத்தில் ஒரு பாடலுக்கு சிறப்புத் தோற்றத்தில் நடனமாட வைக்க முடிவு செய்து விட்டார்.

இதற்காக நாளை சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசுகிறார் பிராவோ.

ராஜன் மாதவ் இதற்கு முன் சேரன், பிரசன்னா நடித்த ‘முரண்’ படத்தை இயக்கியவர்.

»»  read more

8/26/2013

லயன்ஸ் வெற்றிக் கிண்ண மென்பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியின் ஆரம்ப வைபவம்


(ஹனீபா)
சர்வதேச லயன்ஸ் கழகத்தின 306 சீ2; மாவட்டத்தின் கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில்; லயன்ஸ் வெற்றிக் கிண்ண மென்பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியின் ஆரம்ப வைபவம் (24) மாலை கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சர்வதேச லயன்ஸ் கழகத்தின 306 சீ2; மாவட்டத்தின் ஆளுனர் லயன் லசந்த பெரேரா-எம்.ஜே.எப், கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக ஆளுனர் சபையின் பிரதி செயலாளர் லயன் எந்திரி; என்.பி.ரஞ்சன், ஆளுனர் சபையின் பிரதி பொருளாளர் லயன் பாஸ்கரன், ஆளுனர் இணைப்பாளர்களான லயன் எம்.வை.ஏ.சக்கூர், லயன் சிவகுரு சன்முகநாதன், பிரந்திய தலைவர் லயன் எஸ்.தைரியராஜா,வலய தலைவர் லயன் கே.பொன்னம்பலம்,; தலைவர் லயன் எஸ்.சிறிரங்கன், கழக கெயலாளர் லயன் ஏ.ஜே.எம்.ஹனீபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

32 விளையாட்டுக் கழகங்கள் பங்கு கொள்ளும் இந்த கிறிக்கட் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நாள் போட்டியில் பாண்டிருப்பு இளைஞர் விளையாட்டுக் கழக அணியும், கல்லாறு பிரன்சிப் விளையாட்டுக் கழகமும் கலந்து கொண்டன.



»»  read more

8/24/2013

கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகத்தின் 300வது சினேக பூர்வ உதைபந்தாட்ட போட்டி


(அகமட் எஸ். முகைடீன்)
கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகத்தின் 300வது சினேக பூர்வ உதைபந்தாட்ட போட்டி மாவனல்லை யுனைட்டட் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து இன்று (23.08.2013) மாலை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

பிர்லியன்ட் விளையாட்டுக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு 22 வருட காலத்தில் நடைபெற்ற இந்த 300வது உதைபந்தாட்ட போட்டியில் 4:0 என்ற கோள் கணக்கில் பிர்லியன்ட் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது.
இவ்வுதைப்பந்தாட்ட போட்டியின்போது பார்வையாளர்களுக்கு இலவச கூப்பன் வழங்கப்பட்டு குழுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட அதிஷ்டசாலிக்கு சிறுவருக்கான துவிச்சக்கர வண்டி ஒன்று பரிசளிக்கப்பட்டது.

இதன்போது இப்பிரதேசத்தின் உதைபந்தாட்ட விளையாட்டு துறை வளர்ச்சிக்காய் சேவையாற்றிய விளையாட்டு ஆசிரியர் எம்.ஐ.ஏ.நசாரிற்கு பிரதம அதிதியினால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அத்தோடு இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த அதிதிகளுக்கு நினைவுச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.

பிர்லியன்ட் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஐ.எல்.சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸ் தலைவரும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா, கௌரவ அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், சிறப்பு அதிதிகளாக முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துல் ரஸ்ஸாக், மாநகர சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவரும், சட்டத்தரணியுமான ஏ.எம்.றகீப், ஓய்வுபெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.



»»  read more

8/21/2013

வஸீம் அக்ரம் மறுமணம் செய்தார்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலை­வ­ரான வஸிம் அக்ரம் தனது அவுஸ்­தி­ரே­லிய காத­லி­யான ஷனீரா தொம்­ஸனை திரு­மணம் செய்­து­கொண்­ட­தாக இன்று புதன்­கி­ழமை அறி­வித்தார். பாகிஸ்­தானின் லாகூர் நக ரில் ஓகஸ்ட் 12 ஆம் திகதி இத்­தி­ரு­மணம் நடை­பெற்­ற­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. 47 வய­தான வஸிம் அக்­ரமின் முதல் மனை­வி­யான ஹுமா நோய்­களால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு கால­மானார். இந்­நிலையில் 30 வய­தான ஷனீரா தொம்­ஸனை வஸிம் அக்ரம் திரு­மணம் செய்­துள்ளார். ஷனீரா லாகூ­ருக்குச் செல்­வ­தற்­குமுன், இம்­மாத முற்­ப­கு­தியில் கராச்­சிக்கு சென்று, அங்கு நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்ள வஸிம் அக்­ரமின் தந்­தையை சந்­தித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.“கடந்­த­வாரம் எளி­மையான வைப­வ­மொன்றில் ஷனீ­ராவை நான் திரு­மணம் செய்தேன். இது எனக்கும் எனது பிள்­ளை­க­ளுக்கும் புதிய வாழ்க்­கையின் ஆரம்­ப­மாகும்” என வஸிம் அக்­ரம்­ கூ­றினார். தற்­போது ஷனீரா தொம்ஸன் இஸ்­லாத்தை தழு­வி­யுள்­ள­தா­கவும் அவர், உருது மொழியை கற்று வரு­வ­தா­கவும் வஸிம் அக்ரம் தெரி­வித்­துள்ளார்.


»»  read more

ஆபாச நடனம் பார்க்கப்போய் சிக்கித் தவிக்கும் பாக். கிரிக்கெட் வீரர்கள்


பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூவர், அழகிகளின் ஆபாச நடனத்தைப் பார்த்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ளனர். 

பாகிஸ்தான் அணி வீரர்களின் இந்த செயலால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுப்பாகியுள்ளதாம். 

பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ள ஜூனைத் கான், அன்வர் அலி, அலி அசாத் ஆகியோர்தான் இவ்வாறு நடனத்தை பார்த்து சிக்கியவர்கள். 

லாகூரில் உள்ள பிரபலமான தியேட்டர் ஒன்றுக்குப் போன இவர்கள் மூவரும், அங்கு நடந்த அரைகுறை ஆடை அணிந்த அழகிகளின் ஆபாச நடனத்தைப் பார்த்து இரசித்துள்ளனர். 

இதனை பாகிஸ்தானின் தொலைக்காட்சி ஒன்று இரகசியமாக படம் பிடித்து வெளியிட்டு மானத்தை வாங்கி விட்டனர். 

சிம்பாப்வே தொடருக்காக கிளம்புவதற்காக முன்பாக மூன்று வீரர்களும் இந்த காட்சியைப் பார்த்து ஜொள்ளு விட்டுள்ளனராம். 

இவர்கள் போனது தியேட்டர் என்றாலும் கூட அங்கு படம் காட்டப்படுவதில்லை. மாறாக ஆபாச நடிகைகள் வந்து அங்கு குத்தாட்டம் போட்டுக் காட்டுவார்கள். அதைப் பார்க்கத்தான் இவர்கள் போயுள்ளனர்.

»»  read more

8/19/2013

சிம்பாப்பே வேகப்பந்து வீச்சாளர் ஜார்விஸ் திடீர் ஓய்வு


சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான, (24) கைல் ஜார்விஸ் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

சிம்பாப்வே அணிக்காக 8 டெஸ்டில் பங்கேற்று 30 விக்கெட்டுகளையும், 24 ஒரு நாள் போட்டிகளில் 27 விக்கெட்டுகளையும், ஒன்பது 20 ஓவர் போட்டிகளில் 10 விக்கெட்டுக்களையும் இவர் கைப்பற்றி இருக்கிறார். 

சிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. வீரர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்க முடியாமல் தவிக்கிறது. 

இதனை காரணம் காட்டி சிம்பாப்வே அணியை ஜார்விஸ் துறந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.... 

சில அணிகளில் இருந்து கடந்த சில மாதங்களாக எனக்கு அழைப்பு வந்தது. ஆனாலும் தொடர்ந்து சிம்பாப்வே அணிக்காக விளையாடினேன். 

கடந்த வாரம் சம்பள பிரச்சினை எழுந்த போது, சிம்பாப்வே கிரிக்கெட்டை விட்டு விலக இதுவே சரியான நேரம் என்று உணர்ந்தேன். 

எனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டு, கவுண்டி போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளேன். இங்கிலாந்தின் முன்னணி கவுண்டி அணியுடன் 3 ஆண்டுகள் விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளேன். 

எனக்கு என்று நிலையான வருமானம் அவசியம். அதனால் தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். 

இதனை இரசிகர்களும், பொதுமக்களும் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். அணியின் சக வீரர்களிடமும் நேற்று முன்தினம் சொல்லி விட்டேன். 

அவர்களும் நான் ஏன் இந்த முடிவுக்கு வந்தேன் என்பதை புரிந்து கொண்டனர். சிம்பாப்வே தான் எப்போதும் எனது சொந்த அணி. கடந்த சில ஆண்டுகளாக எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வருகிற பாகிஸ்தான் தொடரில் சிம்பாப்வே அணி சிறப்பாக செயல்பட எனது வாழ்த்துகள். 

இவ்வாறு ஜார்விஸ் கூறியுள்ளார்.
»»  read more

8/14/2013

ஆஷஸ் தொடர் இங்கிலாந்து வசமானது


அவுஸ்திரேலியாவுடனான நான்காவது ஆஷஸ் ரெஸ்ட் போட்டியை 74 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றியீட்டியது. இதன்மூலம் இங்கிலாந்து ஆஷஸ் தொடரை 3-0 என முன்நிலை பெற்றுள்ளது. 

செஸ்டர் லெ ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற போட்டியின் நான்காவது நாளான நேற்று முன்தினம் அவுஸ்திரேலிய அணிக்கு 299 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

எனினும் அவுஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 68.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 224 ஓட்டங்களையே பெற்றது. ஆரம்ப வீரர் டேவிட் வோனர் அதிகபட்சமாக 71 ஓட்டங்களைப் பெற்றார். 

அபாரமாக பந்துவீசிய ஸ்டுவட் புரோட் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நான்காவது ரெஸ்டில் அவர் மொத்தமாக 11 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். 

முன்னதாக போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸிக்காக 238 ஓட்டங்களையே பெற்றது. 

தொடர்ந்து அவுஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 270 பெற்று முன்னிலை பெற்றது. ஆனால் இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக செயற்பட்டு 330 ஓட்டங்களை பெற்றது. 

இங்கிலாந்து ஆஷஸ் தொடர் ஒன்றை 3-0 என கைப்பற்றி இருப்பது 1977 ஆம் ஆண்டுக்கு பின்னர் இது முதல் முறையாகும். அதேபோன்று ஆஷஸ் தொடரில் இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில், இங்கிலாந்து 3-0 என முன்னிலை பெற்றிருப்பது 1928-29 தொடருக்குப் பின் இது முதல் முறையாகும். 

இதன்படி கடைசி ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் அது 4-0 என தொடரைக் கைப்பற்றும். ஆஷஸ் வரலாற்றில் இங்கிலாந்து இதுவரை தொடரை 4-0 என வென்றதில்லை.
»»  read more

8/10/2013

பாதுகாப்பு ஊழியர்களை நோக்கி சிறுநீர் கழித்த கிரிக்கெட் வீரர்


இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் வினோதமான சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

31 வயதான பனேசர், கடந்த திங்கட்கிழமை பிரைட்டான் கடற்கரை ஓரம் அமைந்துள்ள இரவு விடுதிக்கு சென்றார். 

அங்கு ஆசை தீர மது அருந்தினார். போதை தலைக்கேறிய நிலையில், அவர் அங்கு வந்த சில பெண்களிடம் தொல்லை கொடுக்கும் வகையில் நடந்து கொண்டார். 

இதனால் அவரை இரவு விடுதியை விட்டு வெளியேற்றும்படி அந்த பெண்கள், விடுதியின் பாதுகாப்பு ஊழியர்களிடம் புகார் செய்தனர். 

இதனால் ஆத்திரமடைந்த பனேசர், கிளப்பில் மேல்பகுதிக்கு சென்று அங்கிருந்து பாதுகாப்பு ஊழியர்களை நோக்கி சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்தினார். இதையடுத்து அந்த ஊழியர்கள் அவரை பிடித்து சென்று பொலிஸாரிம் ஒப்படைத்தனர். குடித்துவிட்டு ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும், பொது இடத்தில் சிறுநீர் கழித்ததாகவும் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சம்பவத்திற்கு பனேசர் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். பனேசர், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3–வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால் களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
»»  read more

7/19/2013

டெண்டுல்கரை விட லாராவே சிறந்தவர் : பொண்டிங்

இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரை விட மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் பிரையன் லாரா தான் சிறந்தவர் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறியிருப்பதாவது, 

‘‘சச்சின் டெண்டுல்கர் (இந்தியா), பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்) இருவரும் உலகின் தரமான துடுப்பாட்ட வீரர்கள் தான். ஆனால் டெண்டுல்கரை விட லாரா தான் தனது அணிக்காக நிறைய வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டின் போது, சச்சினை காட்டினாலும் லாரா அடுத்த நாள் துடுப்பெடுத்தாட வருவதை நினைத்து ஒரு தலைவராக பல நாட்கள் தூக்கத்தை தொலைத்துள்ளேன். 

களத்தில் டெண்டுல்கரை கட்டுப்படுத்த வேண்டும் என்ற சூழ்நிலை எழுந்தால், நிச்சயம் அதற்குரிய வழிமுறையை கண்டுபிடித்து விடலாம். 

ஆனால் லாரா அப்படி இல்லை. களம் இறங்கிய அரை மணிநேரத்தில், அதிரடியாக விளையாடி ஆட்டத்தை நம்மிடம் இருந்து பிரித்து போக்கையே மாற்றி விடுவார். 

என்னை பொறுத்தவரை எத்தனை சதங்கள் அடித்தோம் என்பதை விட அணியின் வெற்றிகள், தொடரை வெல்வது ஆகியவை தான் மிகவும் முக்கியம்’’ என்றார்.
»»  read more
புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா